Ad Widget

கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி வீரசிங்கம் நினைவாக அஞ்சல் தலை வெளியீடு

கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம் அவர்களின் ஞாபகார்த்த அஞ்சல் தலை நேற்று வெள்ளிக்கிழமை (27.06.2016) இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

அமரர் வி.வீரசிங்கம் அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியிருந்ததோடு பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். இவரது முயற்சியின் பலனாக உருவான மூளாய் கூட்டுவு வைத்தியசாலையே இலங்கையில் பல்வேறு இடங்களிலும் கூட்டுறவு வைத்தியசாலைகள் உருவாகக் காரணமாக அமைந்தது. தேசிய அளவில் முதன்முதலாக அகில இலங்கை கூட்டுறவுச் சம்மேளனத்தை உருவாக்கி அதன் முதலாவது தலைவர் என்ற பெருமையை பெற்ற இவர், இலங்கையில் முதன்முதலாக கூட்டுறவு வங்கி தோற்றம் பெறுவதற்கும் காரணமாக அமைந்தவர்.

இலங்கையில் கூட்டுறவுத்துறைக்கு வலுவான அடித்தளத்தை இட்ட இவரது நினைவாக அஞ்சல்தலை வெளியிடும் முயற்சி 1990ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டபோதும் இப்போது வடமாகாண கூட்டுறவு அமைச்சின் முயற்சியினால் அது சாத்தியமாகியுள்ளது.

இந் நிகழ்ச்சியில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பிரதி அஞ்சல் அதிபர் ந. இரட்னசிங்கத்திடம் இருந்து முதல்நாள் அஞ்சல் உறையை முதலாவதாகப் பெற்றுக் கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனதிராசா, வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், வே.சிவயோகன், க.தர்மலிங்கம், க.சிவாஜிலிங்கம், சு.பசுபதிப்பிள்ளை, பிரதம செயலாளர் அ.பத்திநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், ஆகியோருடன் மண்டபம் நிறைந்த அளவுக்குக் கூட்டுறவாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்டுள்ள வீரசிங்கத்தின் ஓவியம் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான ஆசை இராசையாவால் வரையப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

01

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

16

17

18

19

20

Related Posts