Ad Widget

இரண்டு தேசங்கள் ஒருநாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நடாத்திய பாட்டாளி வர்க்க மக்களின் மே தினம் 2016 எழுச்சி நிகழ்வு பருத்தித்துறை சிவன் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இறைமையுள்ள தமிழ் தேசத்தின் அங்கீகாரம் என்பவற்றை வலியுறுத்தி கட்சியின் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில் ஈகைச்சுடரினை மாவீரர் ஆதவன் அவர்களின் தந்தையார் ஏற்றி வைத்தார்.

அதைத்தொடர்ந்து மண்ணின் மைந்தர்களுக்காகவும் போரில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை அடுத்து வரவேற்புரை துசாந்தன் வழங்கினார். அதையடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உபதலைவரும் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உபதவிசாளருமான வின்சென்ற் டீ போல் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.

தமிழ்த் தேசிய அரசியல் இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய அரசியல் இயக்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உபதலைவியும் பெண்கள் விவகார செயலாளருமான திருமதி பத்மினி சிதம்பரநாதன், பிரபல சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைமாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட உபதலைவர் முருகேசு வரதராஜா ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உதவி அமைப்பாளர் மயில்வானம் விமலாதரன் அவர்கள் கட்யினால் மே தினத்தில் வெளியிடப்பட்ட 12 தீர்மானங்களை வெளியிட்டு வைத்தார். கட்சியின் இளைஞர் அணி செயலாளர் இன்னாசிமுத்து சத்தியசீலன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.

இவ் நிகழ்வில் கட்சியினால் 12 அம்சங்களை உள்ளடக்கியதாக மேதின பிரகடனம் வெளியிடப்பட்டது.மேதின பிரகடனத்தினை பார்ப்பதற்கு

TNPF May Day Declaration_ 2016

01-TNPF May Day 2016

1_TNPF May Day 2016

2

3_gajan Ponnambalam

5_Mayday2016

6_Mayday2016

7_vincent De Paul

15_Mayday2016

16_Mayday2016

17_Mayday2016

17ba838648f04e2bc96169a7d1c745db4c1d2dc664633f903c9fde788691fae1_full

21_Mayday2016

258eb3311c343b70d969533234dad862fbd551a16a2ecf53348c792f448062b2_full

8546b9c0cc9b3d0eff74e935fa3a9b714c84d9cd53ad75446bd8de52910835f9_full

13933daee8d27d175245516f3b0257fb72b6c30513c2953968a441788471da83_full

c8d6e9c7f26c0d1b26cadad90571f58f645fa98bcc8791ee2fa69d12b9253efa_full

fe59f089ade4e8b1dc3b62d56cfcee60c9ebc4c9ff78c05ea4f57d4440baa8c6_full

kajendrakumar vavunija

pathmini TNPF

sukas lawyer

Related Posts