Ad Widget

யாழ்ப்பாணத்தில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு அழகு ராணிப் போட்டி

யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டினைமுன்னிட்டு மாநகரசபை மைதானத்தில் அழகு ராணிப் போட்டியினை நடாத்தவுள்ளனர்.

குறித்த நிகழ்வுகள் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளின் அங்கமாக நடைபெறவுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி வீரசிங்க தெரிவித்தார்.

சித்திரை புத்தாண்டில் தங்க இல்லம் எனும் தொனிப்பொருளில் ஏப்ரல் 18 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் நகர சபை மைதானத்தில் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதற்கமைய சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம், அழகு ராணி போட்டி, கிறீஸ் மரம், தலையணை சமர்,சட்டி உடைத்தல்,விநோத உடை போட்டி,சங்கீத தொப்பி மாற்றல்,யானைக்கு கண் வைத்தல்,பணிஸ் சாப்பிடுதல் பலூன் உடைத்தல்,தேங்காய் திருவுதல்.கயிறு இழுத்தல்,றபான் அடித்தல்,சாக்கு ஓட்டம் என்பன இடம்பெறவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது

இப்போட்டிகள் திறந்த போட்டிகளாகவும்,ஆண்,பெண்,குழந்தைகளுக்குமான போட்டிகளாகவும் அமையவுள்ளன.

இந்நிகழ்விற்கு வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் உட்பட பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். எனவே குறித்த நிகழ்வில் தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கு எதிரான அழகு ராணி எனும் போட்டியினை பொலிசார் நிறுத்த வேண்டும் என மகளிர் அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Related Posts