Ad Widget

வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சூழல்தின நிகழ்ச்சி வவுனியாவில்

வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி இம்முறை வவுனியாவில் நடைபெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியா கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

02

ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் யூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வருடத்தில் இருந்து மே 30 தொடங்கி யூன் 5ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய சுற்றுச்சூழல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சு பாடசாலை மட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வருட சுற்றுச்சூழல்; தினத்துக்கான கருப்பொருளாக ‘வன உயிரிகளின் சட்ட விரோத வர்த்தகத்துக்கு எதிராக எழுவோம்’ என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற சூழல்தின நிகழ்ச்சியில் இக்கருப்பொருளுக்கு அமைவாக சிறப்புரைகள் இடம்பெற்றதோடு விவசாயத்திணைக்களத்தால் சூழலுக்கு இசைவான விவசாயம் தொடர்பான கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் மாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராஐா, ம.தியாகராசா, அ.ஜயதிலகே, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் செ.அன்ரனி சோமராஐா, கலைமகள் மகாவித்தியாலய அதிபர் க.சிவநாதன் உட்பட வவுனியா தெற்கு வலயத்தின் பாடசாலைகளில் இருந்து ஏராளமான மாணவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். கலந்துகொண்ட மாணவர்களிடையே சுற்றுச்சூழல் தொடர்பான வினாவிடைப் போட்டி நடாத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்களுக்கு…

Related Posts