வலி வடக்குப் பிரதேச நிர்வாகம் மீதுபொது மக்கள் அதிருப்தி

அளவெட்டி வடக்கு கிராமியச் செயலகத்தின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வுகள் அண்மையில் கிராமசேவையாளர் க.கணேசதாஸ் தலமையில் நடைபெற்றன. இந் நிகழ்வில் அரச அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந் நிகழ்வுக்கு வலி வடக்குப் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஆன உதவிப்பிரதேச செயலர்... Read more »

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு ஆனந்தசங்கரி அஞ்சலி செலுத்தினார்!

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபனின்... Read more »

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 29ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 29ஆவது தினமாகிய இன்றைய தினத்தில் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை பொதுமக்கள் சிலரால் மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் காலை 10 மணியளவில் ஜனநாயகப் போராளிகள்... Read more »

புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் போருக்குப் பின்னர் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை :பொ.ஐங்கரநேசன்

எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள். அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். போராட்ட காலத்தில் அவர்களது உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆனால், போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லையென்று... Read more »

சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் ஆரம்பமாகியது

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி’ என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (22.08.2016) ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை... Read more »

யாழில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் கங்கை அமரனின் இசை நிகழ்ச்சி

புகழ்பெற்ற இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியொன்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ”நண்பேண்டா”  என பெயரிடப்பட்டுள்ள குறித்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இசைக்கலைஞர் ,... Read more »

யாழில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளை நினைவு கூரும் நினைவேந்தல்... Read more »

பன்னாட்டு மாணவர்கள் யாழில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரநடுகை

பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர். திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரக்கன்றுகளை நடுகை செய்துள்ளனர். பல்வேறு நாடுகளையும் சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களை... Read more »

யாழ் பல்கலையில் “பசுமையான எதிர்காலத்தை நோக்கி” சர்வதேச ஆய்வரங்கு

இவ்வாண்டுக்கான பசுமையான எதிர்காலத்தை நோக்கி சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் சர்வதேச அளவில் பிரபலமான நிபுணர்களின் பிரசன்னத்துடனும், இலங்கையின் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக நடாத்தி வரும் சர்வதேச ஆய்வு... Read more »

வடக்கின் பொருளாதாரத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்றாகக் கூட்டுறவைப் பலப்படுத்துங்கள்!-பொ.ஐங்கரநேசன்

நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கும் பிரதான தூண்களாக அரசதுறையும் தனியார்துறையும் விளங்குகின்றன. அத்தோடு, நாட்டின், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைத் தாங்கும் மூன்றாவது தூணாகக் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்துங்கள் என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகிழக்கு வடபகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் சர்வதேச கூட்டுறவு... Read more »

ஆறிப்போன காயங்களின் வலி யாழ்ப்பாணத்திலும் லண்டனிலும் அறிமுகம்

எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் ச.ராதேயன் தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர்... Read more »

“இருட்டறை” குறும்பட வெளியீடு

இயக்குனர் கிருத்திகன் இயக்கத்தில் உருவான “இருட்டறை” குறும்படம் எதிர்வரும் 25ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரியில் வெளியிடபடவுள்ளது. இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றார்கள் இருட்டறை படக்குழுவினர். Read more »

யாழில் அப்துல்கலாமின் சிலை திறந்து வைத்து முதலமைச்சர் உரை

இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி டாக்டர் எ. பி. ஜே. அப்துல் கலாமின் திருவருவச் சிலை இன்று யாழ் பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த திருவுருவச் சிலையினை இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்கா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர்... Read more »

யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ் மா அதிபர் விஜயம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தான் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக இன்று வெள்ளிக்கிழமை (17) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்துக்கான முதலாவது... Read more »

பெண் போராளிகளின் தடுப்புமுகாம் வாழ்வு பற்றிய நூல் வெளியீடு

முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூல் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது. போரில் விழுப்புண்... Read more »

அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது நினைவு தினம் வடமராட்சியில் அனுஷ்டிப்பு!

நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை... Read more »

வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சூழல்தின நிகழ்ச்சி வவுனியாவில்

வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி இம்முறை வவுனியாவில் நடைபெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியா கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் யூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.... Read more »

நெல் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரங்கள்

வடக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நெல் நாற்றுநடும் இயந்திரங்களையும் நெல் களைகட்டும் இயந்திரங்களையும் வடக்கு விவசாய அமைச்சு வழங்கியுள்ளது. இயந்திரங்களை ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் இளைஞர்; விவசாயக் கழகங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியாவில் நடைபெற்றுள்ளது. வவுனியா... Read more »

யாழ். நூலக எரிப்பு ; 35 வருட நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு

ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நேற்று காலை யாழ் நூல் நிலையத்தில் நினைவு நாள் நிகழ்வொன்றும் அனுஸ்டிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி... Read more »

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி

வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல்கள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை இன்று புதன்கிழமை காலை பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வாக்காளர் தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தேர்தல்கள் திணைக்களத்தினால்... Read more »