Ad Widget

புங்கையின் புதிய ஒளி அமைப்பால் புங்குடுதீவில் பனம் விதைகள் நடுகை

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு புங்குடுதீவில் இயங்கி வரும் புங்கையின் புதிய ஒளி என்னும் இளைஞர் அமைப்பால் புங்குடுதீவில் பனம் விதைகள் நாட்டப்பட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை (15.11.2016) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு முதல் பனம் விதையை நாட்டி, நடுகையைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புங்குடுதீவுப் பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மாணவ மாணவிகளும் பனம் விதைகளை நாட்டி வைத்தனர்.

பனை விதை நடுகையின் பின்னர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய மண்டபத்தில் மாணவர்களுக்கான மரநடுகை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வும், வினா விடைப் போட்டிகளும் இடம்பெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் பிரமாண அடிப்படையிலான நன்கொடைநிதியில் இருந்து புங்கையின் புதிய ஒளி அமைப்புக்கு மரநடுகையைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு உதவியாக முச்சக்கரத் தள்ளு வண்டிகள், மண்வெட்டிகள், கடப்பாரைகள் மற்றும் பிக்கான்கள் போன்ற உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் சு.கனகரத்தினம், புங்கையின் புதிய ஒளி அமைப்பின் தலைவர் அ.கவியரசன், கழக அமைப்பின் செயலாளர் க.குணாளன் ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

புங்கையின் புதிய ஒளி அமைப்பால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு கடந்த ஆண்டில் நாட்டப்பட்ட பனை விதைகளும் வரிசைக்கிரமமாக அப்பகுதியில் முளைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

06

09

10

01

03

11

Related Posts