Ad Widget

ஈழத்தில் எங்களை நாங்கள் ஆளுவதே எம்.ஜி.ஆரின் விருப்பம் ; சிவாஜிலிங்கம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் விரும்பியதை போன்று ஈழத்தில் எங்களை நாங்கள் ஆளும் ஆட்சியை வென்றெடுக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் ஈழத்தின் இணைப்பு பாலமாக எம்.ஜி.ஆர். விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது

கோப்பாய் பகுதியை சேர்ந்த எம்.ஜிஆரின் தீவிர ரசிகர் ஒருவரின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட வறிய மக்கள் 100 பேருக்கு ஆடைகள் வழங்கப்பட்டதுடன் இனிப்பு பண்டங்கள் பரிமாறியும் எம்.ஜி.ஆரின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

இதில் உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எம்.ஜி.ஆரின் விருப்பத்தை நிறைவேற்ற அனைவரும் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

அதேவேளை, தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனை ஸ்ரீலங்கா தமிழகத்திற்கு வழங்கியதை இட்டு தாம் பெருமை கொள்வதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்தார்.

Related Posts