Ad Widget

நெல் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரங்கள்

வடக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நெல் நாற்றுநடும் இயந்திரங்களையும் நெல் களைகட்டும் இயந்திரங்களையும் வடக்கு விவசாய அமைச்சு வழங்கியுள்ளது.

01

இயந்திரங்களை ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் இளைஞர்; விவசாயக் கழகங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியாவில் நடைபெற்றுள்ளது. வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இயந்திரங்களை வழங்கிவைத்துள்ளார்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சு 2016ஆம் ஆண்டின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் 19 மில்லியன் ரூபாவை வடக்கில் நெல் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் திட்டத்துக்கென ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 18 நெல் நாற்றுநடுகை செய்யும் இயந்திரங்களும் 36 களைகட்டும் இயந்திரங்களும் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பெறுமதி 13 மில்லியன் ரூபாய்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இயந்திரங்களை வழங்கிவைக்கும் நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா, அ.ஜெயதிலக, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் அ.செல்வராஜா, அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன், தெ.யோகேஸ்வரன,; பொ.அற்புதச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

மேலும் படங்களுக்கு..

Related Posts