- Tuesday
- July 21st, 2026
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய கடற்கோளின்போது, இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 40,000 பேர் வரையில் பலியாகினார்கள். முல்லை மாவட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் உயிர் துறந்தார்கள். அவர்களுக்கான நினைவஞ்சலி, கடற்கோள் நினைவுதினமான நேற்று சனிக்கிழமை (26.12.2015) முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கோள் நினைவாலயத்தில் நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் ஆகிய மூன்று மதமுறைகளிலும் இடம்பெற்ற...
பெண்களுக்கெதிரான வன்முறைக்கு வாரத்தினை முன்னிட்டு பெண்களின் சுய பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறை இன்று யாழ் பழைய பூங்கா வீதியிலுள்ள முகாமைத்துவ திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலக மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டிலும் UNHCR மற்றும் மனித...
வவுனியாவில் சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையும் படங்களும்
குடும்ப சமாதானத்தை மேம்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் CCH நிறுவனமானது KNH இன் அனுசரணையுடன் பெண்கள் வன் முறைக்கெதிரான ஊர்வலத்தினை 09.12.2015 இன்று மேற்கொண்டனர். நவம்பர் 25 ஆம் திகதிதொடக்கம் டிசெம்பர் 10 திகதி வரையான காலப்பகுதியினை ORANGE THE WORLD பெண்கள் வன்முறைக்கெதிரான வாரமாக ஐக்கிய நாடுகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று நடைபெற்ற ஊர்வலமானது ORANGE...
வடமாகாண மரநடுகை மாதத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக மன்னார் மாவட்டத்தில் பழமரத் தோட்டங்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி மன்னார் தாமரைக்குளப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (30.11.2015) நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு பழமரக்கன்றுகளை வழங்கி வைத்ததோடு, அப்பகுதியில் புதிய முறையில் மாந்தோப்பு...
அண்மையில் இலங்கையின் வடபகுதியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேச மக்களுக்கு ஜேர்மனியில் உள்ள வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தினரால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது. அதன் இன்னொரு கட்டமாக வறணிப்பகுதியில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினருக்கு மேற்படி ஆலயத்தினரின் நிதி உதவியுடன் நிவாரண உதவிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கடந்த...
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் விதை சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான அடிக்கல்லை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (24.11.2015) நாட்டி வைத்துள்ளார். விதைப்புச் செய்யவேண்டிய விதைகளுடன் முளைதிறனற்ற விதைகள், வேறு பயிரினங்களின் விதைகள், களை விதைகள் போன்றவையும் கலந்திருப்பதால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக்...
யாழ் மாவட்டத்தில் வளலாய், வசாவிளான், தெல்லிப்பளை பிரதேசங்களில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சால் மறுவயற்பயிர் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும், மறுவயற்பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடனும் நிலக்கடலை, பயறு, உழுந்து ஆகிய மறுவயற்பயிர் விதைகளை விநியோகிக்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. நேற்று திங்கட்கிழமை (23.11.2015)...
கனடாவில் வசிக்கும் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியை சேர்ந்த கைலாயபிள்ளை குடும்பத்தினரால் தமது குடும்ப அங்கத்தவர்கள் நினைவாக வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உதவி அமைப்பாளர் மயில்வாகனம் விமலாதரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேற்படி நிகழ்வில் பாடசாலையின் உபஅதிபர்,...
தாயகத்தில் யுதத்தினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கான உதவிப் பணியில் ஆறாவது ஆண்டினை வெற்றிகரமாக கடந்து கொண்டிருக்கும் உறங்கா விழிகள் அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வும் சிறப்பு மதிய விருந்துபசாரமும் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (20-11-2015) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களும் வவுனியா...
வடமாகாணசபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் மரநடுகை மாதத்தை முன்னிட்டு சுவிற்சர்லாந்து சூரிச் சிவன் கோவிலின் அன்பே சிவம் அமைப்பு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறது. அன்பே சிவம் அமைப்பால் ஞாயிற்றுக்கிழமை (15.11.2015) பச்சிலைப்பள்ளி மல்வில் கிராம மக்களுக்கு நல்லின மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மல்வில் கிருஷ;ணன் கோவிலில் இடம்பெற்ற மரக்கன்றுகள் விநியோக நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு...
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு கட்சியன் தலைவரும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றினார். கட்சியன் உறுப்பினர்கள் பொதுஆதரவாளர்கள் மலர் வணக்கம் செலுத்தினர். நேற்று பிற்பகல் 4.00 மணியளவில்...
தீபாவளி தினமான 10-11-2015 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் புத்தாடை அணிந்து மிக மகிழ்வாக தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாடினர். மகிழ்வான தீபாவளியன்று அருள்மிகு முல்லைத்தீவு வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்த பின்னர் சகோதர இல்லமான முல்லைத்தீவு பாரதி சிறுவர் இல்லத்தை சென்றடைந்தனர். அங்கு தமது மதிய உணவின் பின்னர் அங்கு...
நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவரும் மலர்க்கண்காட்சியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டுச் செல்வதோடு மரக்கன்றுகளையும் வாங்கிச் செல்கின்றனர். அலங்காரப் பூச்செடிகளை மாத்திரம் அல்லாமல் பழமரக்கன்றுகள், தென்னம் நாற்றுகள், தேக்கு, சமண்டலை போன்ற வெட்டுமரக்கன்றுகள், பூச்சாடிகள் போன்றவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு மலர்க்கண்காட்சியில் விற்பனையான மரக்கன்றுகளைவிட இந்த...
வடமாகாண மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் விதமாக, வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நாட்டி வரும் நிலையில், இத்திட்டத்தில் இணைந்து கொள்வதில் புலம்பெயர் தமிழர்களும் அக்கறை கொள்ள ஆரம்பித்துள்ளனர். தெல்லிப்பளையில் இருந்து புலம்பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்துவரும் வைத்திய நிபுணரான சீ.நவரத்தினம் என்பவர் தெல்லிப்பளை வித்தகபுரம் கிராமத்துக்கு ஆயிரம் மரக்கன்றுகளை அன்பளிப்புச் செய்துள்ளார். வித்தகபுரத்தில்...
வடமாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி இன்று வியாழக்கிழமை (05.11.2015) நல்லூர் சங்கிலியன் éங்காவில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இதனைத் தொடக்கி வைத்துள்ளார். வடமாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடித்து வருகிறது. இதன் நடவடிக்கைகளில் ஒன்றாக நல்லூர் சங்கிலியன் பூங்காவில்...
நல்லூரில் உள்ள 'கருவி' மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத்தில் அதன் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (31.10.2015) இடம்பெற்றது. அவுஸ்திரேலிய தமிழ்ப் பொறியிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் 'கருவி' மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத் தலைவர் தர்மசேகரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக்...
Loading posts...
All posts loaded
No more posts









