Ad Widget

பெண்கள் வன்முறைக்கெதிரான வாரத்தை முன்னிட்டு ஊர்வலம்

குடும்ப சமாதானத்தை மேம்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் CCH நிறுவனமானது KNH இன் அனுசரணையுடன் பெண்கள் வன் முறைக்கெதிரான ஊர்வலத்தினை 09.12.2015 இன்று மேற்கொண்டனர்.

நவம்பர் 25 ஆம் திகதிதொடக்கம் டிசெம்பர் 10 திகதி வரையான காலப்பகுதியினை ORANGE THE WORLD பெண்கள் வன்முறைக்கெதிரான வாரமாக ஐக்கிய நாடுகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது.

இன்று நடைபெற்ற ஊர்வலமானது ORANGE நிறத்திலான பதாதைகள் பலூன்கள் ஏந்தி வந்ததோடு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி வண்ணம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் கட்டடத்தொகுதியில் ஆரம்பமாகி யாழ்போதனா வைத்தியசாலை வேம்படி சந்தி ஊடாக கச்சேரி வளாகத்தை சென்றடைந்தது.

இறுதியில் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களிடம் துண்டுப் பிரசுரங்கள்வளங்கப்பட்டது. மேலதிக அரசாங்க அதிபர் கூறுகையில் உலகெங்கிலும் பெண்கள்வன்முறைகள் நடைபெறுகின்ற போதிலும் இலங்கையில் அதிக அளவில்பெண்களுக்கான வன் முறைகள் இடம் பெறுகின்றன.

ஆண்களை விட பெண்களின்எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது இதனால் பெண்களை பாதுகாக்கும் செயற்திட்டங்கள் மேற்கொள்ளவேண்டும். மாவட்ட செயலக ரீதியாகவும் பிரதேசசெயலக ரீதியாகவும் மகளீர் விவகார அமைச்சினால் செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நீங்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு நாம் முழுஒத்துழைப்பு நாம் வழங்கதயாராகவுள்ளோம் என கூறினார்.

வன் முறைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை இவ் நிறுவனமானது முன்னெடுப்பது வரவேற்கத்தக்கது. இனிவரும் காலங்களிலும் இவ்வாறானநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

women-3

women-2

women-1

Related Posts