Ad Widget

சிறப்பாக நடைபெற்ற கனடா உறங்கா விழிகள் அமைப்பின் சிறப்பு மதிய விருந்துபசார நிகழ்வும் உலர் உணவுபொருள் வழங்கல் நிகழ்வும்

தாயகத்தில் யுதத்தினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கான உதவிப் பணியில் ஆறாவது ஆண்டினை வெற்றிகரமாக கடந்து கொண்டிருக்கும் உறங்கா விழிகள் அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வும் சிறப்பு மதிய விருந்துபசாரமும் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (20-11-2015) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களும்
வவுனியா ஆனந்தஇல்லத்தில் வைத்து பராமரிக்கப்படும் மனநலம் குன்றிய பெண்களுக்கான ஆடைகளும் அந்த நிறுவனத்திற்கான நீர்த்தாங்கி அமைப்பதற்கான நிதி உதவியும் அந்த நிறுவன உத்தியோகத்தர்களிடம் வழங்கப்பட்டது.

போரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இ.தர்மதாசன் என்பவருக்கு கிணறு அமைப்பதற்காக ஒரு தொகை நிதி உதவி வழங்கப்பட்டது.

வைகறை பராமரிப்பு நிலையத்தில் தங்கியுள்ள முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட 16பேருக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டது.

அவர்கள் அனைவர் சார்பாகவும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் அந்த நிலையத்தினால் பராமரிக்கப்பட்டுவரும் இராசையா சிவகுமார் என்பவர் பெற்றுக் கொண்டார்.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அடிகளார் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோவில்குளம் கண்ணன் ஆலய பிரதம குருக்கள் வைத்தியநாத குருக்கள், சர்வதேச இந்து இளைஞர் பேரவை தலைவர் மதிப்பிற்குரிய சிவபாதம் கஜேந்திரகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன், அரசியல் ஆய்வாளரும் இதுநம்தேசம் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான சி.அ.யோதிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கௌரவ பொருளாளர் கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார், வவுனியா மாவட்ட தமிழ் சங்க தலைவர் எஸ்.என்.ஜீ.நாதன் ஐயா, வவுனியா றம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி சிவரதி ராஜ்குமார், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளரும் மனநலம் குன்றிய பெண்கள் பராமரிப்பு நிலையமான ஆனந்தஇல்லத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவருமான சிவபாலன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உதவி அமைப்பாளர் விமலாதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வவுனியாவில் உள்ள ஆனந்தஇல்ல உத்தியோகத்தர் திருமதி இராமையா யசோதா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி நிகழ்வு தமிழ்த் தேசிய மகக்ள் முன்னணியின் வவுனியா மாவட்ட பொருளாளர் கோபாலராசா கேசவன் அவர்களாது தலைமையில் இடம்பெற்றது. மேடை நிகழ்வுகளை வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த செல்வி ஜெசிதா ஆனந்தமூர்த்தி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

event-20112015-uranka-valikal- (36)

event-20112015-uranka-valikal- (42)

event-20112015-uranka-valikal- (50)

event-20112015-uranka-valikal- (59)

event-20112015-uranka-valikal- (60)

event-20112015-uranka-valikal- (70)

event-20112015-uranka-valikal- (72)

event-20112015-uranka-valikal- (79)

மேலும் படங்கள்…

Related Posts