Ad Widget

மரநடுகை மாதத்தை முன்னிட்டு அன்பே சிவம் அமைப்பால் மரக்கன்றுகள் விநியோகம்

வடமாகாணசபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் மரநடுகை மாதத்தை முன்னிட்டு சுவிற்சர்லாந்து சூரிச் சிவன் கோவிலின் அன்பே சிவம் அமைப்பு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறது.

அன்பே சிவம் அமைப்பால் ஞாயிற்றுக்கிழமை (15.11.2015) பச்சிலைப்பள்ளி மல்வில் கிராம மக்களுக்கு நல்லின மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மல்வில் கிருஷ;ணன் கோவிலில் இடம்பெற்ற மரக்கன்றுகள் விநியோக நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கிவைத்துள்ளார்.

மல்வில், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்குடியேறியிருக்கும் கிராமம் ஆகும். இங்கு மீள்குடியேறியவர்களில் இருந்து நான்கு குடும்பம் தெரிவுசெய்யப்பட்டு மின் மோட்டர்களும் அவற்றுக்குரிய நீர்விநியோகக் குழாய்களும் அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கனடா மொன்றியலில் வசிக்கும் ஜெயா-ஜெனா சகோதரர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான அமைப்பாளர் கு.குமணன், நிகழ்ச்சி இணைப்பாளர் பி.கோகுலச்செல்வி, மல்வில் கிராமசேவையாளர் சு.காண்டீபன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Malvil Tree Planting - News 1511201501

Malvil Tree Planting - News 1511201502

Malvil Tree Planting - News 1511201503

Malvil Tree Planting - News 1511201504

Malvil Tree Planting - News 1511201505

Malvil Tree Planting - News 1511201506

Malvil Tree Planting - News 1511201507

Malvil Tree Planting - News 1511201508

Malvil Tree Planting - News 1511201509

Malvil Tree Planting - News 1511201510

Malvil Tree Planting - News 1511201511

Malvil Tree Planting - News 1511201512

Malvil Tree Planting - News 1511201513

Malvil Tree Planting - News 1511201514

Related Posts