Ad Widget

யாழ் நகரில் நாக விகாரையில் ”கட்டின” பூஜையும் பெரகரவும்!

யாழ் நகரில் அமைந்துள்ள நாக விகாரையில் ”கட்டின” பூஜை வழிபாடு சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.அதனை முன்னிட்டு பெரேஹரவும் இடம்பெற்றது.ஊர்வல நிகழ்வில் பெரும்பாலான நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு படையணிகள் அவற்றின் ஒவ்வொரு பிரிவுகளும் ஒருங்கிணைத்து நடாத்தின.தமிழ் சிங்கள மாணவ மாணவிகளும் பங்குபற்றினர்.

கட்டின பூஜை என்றால் ,

பௌத்த மத கிரியைகளில் ”கட்டின பூசை” என்பது மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது. புத்தபெருமானின் அருள் வாக்கின்படி பௌத்த மக்களைப் பொறுத்தவரையில் இதுவே மிகவும் உன்னதமான சமய செயற்பாடு என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் வரையறையற்ற புண்ணியத்தினையும் தேடிக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ”கட்டின சீவர” அர்ப்பணிக்கப்படுகின்றது அல்லது பௌத்த துறவிகளுக்கு தானம் வழங்கப்படுகின்றது.

ஒரு பகல் வேளையிலும் இரவு வேளயிலும் நெய்யப்படும் ஆடையே கட்டினய” என அழைக்கப்படும். இது பௌத்த துறவிகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும். ”கட்டின சீவரய” என்பது தடிப்பான நூலினால் நெய்யப்பட்ட ஆடையாகும். இது மழைக்காலங்களில் குளிரை தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்டதாகும்.

சரித்திர கால ஏடுகளில் குறிப்பிட்டுள்ளபடி ஆதிகாலத்து அரசர்கள் ”கட்டியன பூசை”யை பயபக்தியுடன் மிகவும் சிறப்பாக கொண்டாடியிருக்கின்றார்கள். இக்கைங்கரியத்தை மகா பராக்கிரமபாகு மன்னன் பல தடவைகள் மேற்கொண்டான் என அறியக்கிடைக்கின்றது. இராஜாதி இராஜ மன்னனும் இக் ”கட்டியன பூசை”யை தனது இறுதி நாட்கள் வரை மேற்கொண்டுவந்தான் என குறிப்பிடப்படுகின்றது.

கோட்டையில் அரசாண்ட ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் தனது வாழ்நாளில் 3000 தடவைக்கு மேலாக இப்பூசையை மேற்கொண்டான் எனக்கூறப்படுகின்றது. இதனை மேற்கொள்வதனால் கிடைக்கும் பலன் எக்காலமும் நிலைத்து நிற்கும் பூமியைப் போன்று, காலா காலத்திற்கு நிதந்தரமாக நிலைத்து நிற்குமென்றும் அத்தகைய மிகவும் சக்தி வாய்ததென்றும், அசைக்க முடியாத தென்றும் இதன் ஊடாக ”நிப்னா” என்றழைக்கப்படும் நிர்வாண மோட்ச பலனை அடையலாம் என்றும் கூறப்படுகின்றது.

[செய்தி – படங்கள் மயூரப்பிரியன் ]

Related Posts