Ad Widget

வடக்கின் மரநடுகைத் திட்டத்தில் புலம்பெயர் தமிழர்களும் இணைவு

வடமாகாண மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் விதமாக, வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நாட்டி வரும் நிலையில், இத்திட்டத்தில் இணைந்து கொள்வதில் புலம்பெயர் தமிழர்களும் அக்கறை கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

தெல்லிப்பளையில் இருந்து புலம்பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்துவரும் வைத்திய நிபுணரான சீ.நவரத்தினம் என்பவர் தெல்லிப்பளை வித்தகபுரம் கிராமத்துக்கு ஆயிரம் மரக்கன்றுகளை அன்பளிப்புச் செய்துள்ளார். வித்தகபுரத்தில் குடியேறியுள்ள 200 குடும்பங்களுக்கு தலா ஐந்து மரக்கன்றுகள் வீதம் இவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மரக்கன்றுகளை வழங்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (06.11.2015) வித்தகபுரத்தில் நடைபெற்றது. திருமதி கோகிலா மகேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கிவைத்துள்ளார். இதன்போது வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வலிமேற்கு உதவி பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Tree Planting - NEWS 06112015 (1)

Tree Planting - NEWS 06112015 (2)

Tree Planting - NEWS 06112015 (3)

Tree Planting - NEWS 06112015 (4)

Tree Planting - NEWS 06112015 (5)

Tree Planting - NEWS 06112015 (6)

Tree Planting - NEWS 06112015 (7)

Related Posts