Ad Widget

இம்மாதம் யாழ்ப்பாணத்தில் இலவச கல்வி மற்றும் களிப்பாட்ட அம்சங்கள்

நாட்டின் முன்னணி இலக்கியசார்ந்த கொண்டாட்ட நிகழ்வான Fairway Galle Literary Festival இன் இறுதியானதும் மூன்றாவதுமான வார நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த கொண்டாட்டத்தில் பிரத்தியேகமான மற்றும் பரந்தளவு சர்வதேச கலைஞர்கள் பங்கேற்கவுள்ளதுடன், உள்நாட்டு திறமைசாலிகளும் பங்கேற்கவுள்ளனர்.

சகல நிகழ்ச்சிகளும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ளன. களிப்பான அம்சங்களை வழங்குவதற்கு மேலாக, சகல நிகழ்வுகளும் சர்வதேச சிந்தனைகளுடன் கலந்து கல்விசார் உளளம்சங்களை புகட்டும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக யாழ்ப்பாண பிராந்தியத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர கல்வித்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

வட பிராந்தியத்தின் தமிழ் மக்களின் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கவுள்ளதுடன், இலங்கையின் வட பிராந்தியத்தில் இந்த நிகழ்ச்சியை முன்னெடுப்பதற்கு பொருத்தமான பகுதியாக யாழ்ப்பாணம் அமைந்துள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் போது, யாழ்ப்பாண நகரம், மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் தனது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பேணியிருந்தது.

ஆனாலும், உலகளாவிய ரீதியில் காணப்படும் வெவ்வேறு கலாசாரங்கள் பற்றி அறிந்து கொள்ள முடியாமல் போயிருந்தது. எனவே, யாழ்ப்பாணத்துக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளமை என்பது Fairway Galle Literary Festival ஐ பொருத்தமட்டில் மிகவும் பெருமைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு ´தொடர்பாடல்கள்| முறை மூலமாக எழுத்தாளர்கள் தமது தொழில் நுணுக்கள் பற்றிய விடயங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். அத்துடன், இநநிகழ்வில் ´பாரிய சிந்தனை வெளிப்பாடு´ எனும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவற்றில் 45 நிமிட நேர விரிவுரைகள் சர்வதேச எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், கீதா இராமானுஜம் போன்ற சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கதை எழுத்தாளர்களின் ஆக்கங்களும் இடம்பெறவுள்ளன. GRASSROOTED TRUST தமது புதிய ஆக்கமான “From the Cloud” ஐ வெளிப்படுத்தவுள்ளனர்.

நிகழ்வில் இலங்கையின் சகல தேசிய மொழிகளையும் உள்வாங்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ´தமிழ் இலக்கியம், வௌ;வெறு வகைப்பாடுகள்´ எனும் தலைப்பில் குழுவினரின் பங்குபற்றலுடன் ஆரம்பிக்கவுள்ளது. இதில் ஐயாத்துரை சாந்தன், காயத்ரி ஸ்ரீகந்தவேல் மற்றும் கந்தையா ஸ்ரீகணேசன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த குழுவினர் தமிழ் கவிதைகள், எழுத்தாக்கங்கள் மற்றும் புனைக்கதைகள் குறித்து கலந்துரையாடவுள்ளனர். இந்த குழுவினர் வௌ;வேறு ஆக்கங்களின் வரலாறு குறித்து கலந்துரையாடவுள்ளதுடன், ஏன் அவை எழுதப்பட்டுள்ளன குறித்தும் அலசவுள்ளனர். அத்துடன், இவ்வாறான ஆக்கங்களுக்கு ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறான முறைகளை ஆக்கக் கலைஞர்கள் பின்பற்ற வேண்டும் குறித்த விடயங்களையும் ஆராயவுள்ளனர்.

அத்துடன், தமிழ் கலாசாரத்துக்கு பொருத்தமான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இதில் பத்மா விஸ்வநாதனின் The Toss of a Lemon, ரோஹினி மோகனின் The Seasons of Trouble போன்றன தொடர்பிலும் கலந்துரையாடப்படும். விஸ்வநாதனின் நாவலில் தென் இந்தியாவின் தமிழ் பிராமண விதவை ஒருவரின் வாழ்க்கைச் சரிதம் விவரிக்கப்பட்டுள்ளது. தமது சொந்த பாட்டியாரின் வாழ்க்கையை இவர் விவரித்துள்ளார். ரோஹினி மோகனின் புத்தகத்தில், இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் வாழ்க்கையை குறிக்கிறது.

குறிப்பாக, இந்த நிகழ்வில் பல சர்வதேச புத்தகங்கள் பற்றிய விடயங்களும் உள்ளடக்கப்படும்.

Related Posts