Ad Widget

சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த நாள் அறக்கொடை விழா

அமரர் அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 91ஆவது பிறந்த நாள் அறக்கொடை விழா நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.

tellipplai-sri - durga-thanka-amma-kuddi

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடா சைவசித்தாந்த மன்ற நிறுவுநரும் இளைப்பாறிய ஆசிரியர்களுமான விசுவலிங்கம் – வடிவழகாம்பாள் தம்பதிகளும் சிறப்பு விருந்தினாகளாக இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், யாழ்ப்பாணம்போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி, தீவக கல்வி வலய கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவமும் கலந்துகொண்டார்கள்.

துர்க்கையம்மன் ஆலயத்தில் இடம்பெபெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து சிவத்தமிழ் செல்வி நினைவாயலத்தில் வழிபாடுகள் இடம்பெற்று திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆசியுரைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வா.அகிலேஸ்வரக்குருக்கள் இணுவில் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய அறங்காவலர் சிவஸ்ரீ.இ.சுந்தரேஸ்வரக்குருக்கள், நல்லை திருஞானசம்பந்த ஆதீனகுரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் வழங்கினார்கள்.

அன்னையின் பிறந்தநாள் அறக்கொடையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறுவர் சிகிச்சைப் பிரிவுக்கு உரிய நிதி யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடமும் தீவக கல்வி வலயத்திற்கான சிவத்தமிழ் செல்வி கல்வி நிதியம் தீவக கல்விப்பணிப்பாளரிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.

வருடாந்தம் சான்றோர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் சிவத்தமிழ் விருது கரவெட்டியைச் சேர்த மூதறிஞர் இளைப்பாறிய ஆசிரியர் உரையாசிரியர் க.கணிபதிப்பிள்ளை, மயிலிட்டியைச் சேர்ந்த மிருதங்க வித்துவான் கலாபூஷணம் க.ப.சின்னராசா, மல்லாகம் இளைப்பாறிய ஆசிரியர் முன்னைநாள் பிரதேச சபைத்தலைவரும் துர்க்கா பெண்கள் தொண்டர் சபைத் தலைவருமான திருமதி பாலாம்பிகை ஸ்ரீபாஸ்கரன், இளைப்பாறிய நூலகர் மானிப்பாய் இந்து சமய அபிவிருத்தி சபை செல்வி இராஜேஸ்வரி சுப்பையாபிள்ளை, மூத்த பெண் எழுத்தாளர் இலக்கிய வித்தகி கலாபூசணம் திருமதி பத்மா சோமகாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

Related Posts