கண்ணி வெடி அகற்றல் இறுதி நிலையில்

இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் நிறையும் நிலையை எய்தி இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. Read more »

பத்தாயிரம் குடும்பங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுத்திட்டம்!

வறுமை நிலையிலுள்ள 10000 குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் சமுர்த்தி அதிகார சபை பத்து நாள் வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. Read more »

பனை உற்பத்திப் பொருள்களுக்கு தாய்லாந்தில் அமோக வரவேற்பு

யாழ்ப்பாணத்து பனை சார் உற்பத்திப் பொருள்களுக்கு தாய்லாந்தில் அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது என்று பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். Read more »

அப்பாத்துரை எம்.பி யையும் விசாரணைக்கு அழைப்பு

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். Read more »

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 6 மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 6 மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் இன்று தெரிவித்தனர். Read more »

வடக்குத் தேர்தல் நடப்பது சந்தேகமே!; சம்பந்தன் நேற்றுத் தெரிவிப்பு

வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான். அப்படியும் தேர்தல் நடந்தால் அதற்கு முன்னரே தமிழ் மக்களின் கைகளில் துளியளவு அதிகாரமும் சென்றுவிடாமல் தடுப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் அரசு செய்து முடித்துவிடும் Read more »

விபத்தில் 2 இராணுவ வீரர்கள் காயம்

இராணுவத்தினரின் டிரக் வண்டியும் ஹயஸ் ரக வாகனமும் விபத்திற்குள்ளானதில் 2 இராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். Read more »

மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கிவைப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவை சமூக சேவைகள் அமைச்சு வியாழக்கிழமை வழங்கியுள்ளது. Read more »

யாழ்ப்பாண குடாநாடு வெசாக் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது

“2009 ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்தபின் வெசாக் கொண்டாட்டங்கள் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியான சூழலில் கொண்டாடப்படுகின்றது. Read more »

கிளிநொச்சி பொறியியல் பீடம் விரைவில் திறக்கப்படவுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பொறியியல் பீடம் விரைவில் திறக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசத்தினம் தெரிவித்துள்ளார். Read more »

உடுப்பிட்டியில் முகாமில் தங்கியுள்ள வலி. வடக்கு மக்களை வெளியேறுமாறு காணி உரிமையாளர் தாக்குதல்!

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து உடுப்பிட்டி மத்திய முகாமில் நீண்டகாலமாக உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்த காணி உரிமையாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இந்த முகாமில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். Read more »

யாழில் இராணுவக் குடியிருப்பு அமைக்கப்பட உள்ளது!- ஜகத் ஜயசூரிய

யாழ்ப்பாணத்தில் இராணுவக் குடியிருப்பொன்று அமைக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். Read more »

பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும்: ஹத்துருசிங்க

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். Read more »

ஓய்வூதிய திட்டத்தில் 36,800பேர் இணைப்பு

ஓய்வூதிய திட்டத்துக்காக யாழ். மாவட்டத்திலிருந்து 36,800 பேர் இணைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். Read more »

அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு பகுதியாக மாறும் வடமாகாணம்!

வடமாகாண சபைக்கான தேர்தல் களம் யாழில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.யாழில் உள்ள அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் வடமாகாண சபை பற்றிய மக்கள் சந்திப்புக்கள் நடைபெற்று வருகின்றது. Read more »

பொருளாதார நெருக்கடியில் வடபகுதி மீனவர்கள்

யாழ்ப்பாண குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் பலர், தங்கள் தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். Read more »

ஆலய வருமானத்தி​ல் ஏழைகள் நல்வாழ்விற்கு பயன்படுத்துமாறு கோரிக்கை

யாழிலுள்ள ஆலயங்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். Read more »

குடாக்கடல் பகுதியில் இடிதாங்கிகளை உடனடியாக அமைத்து உதவுங்கள்; பாஷையூர் கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை

மண்டைதீவு, பூநகரி மற்றும் கேரதீவு போன்ற முக்கிய இடங்களில் அதிசக்தி வாய்ந்த இடி தாங்கிகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஷையூர் புனித அந்தோனியார் கிராமிய கடற்றொழில் அமைப்பு யாழ்.அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. Read more »

யாழ். இளைஞர் அணி கலைக்கப்படவில்லை; தமிழரசுக் கட்சியின் செயலர் மாவை சேனாதிராசா தெரிவிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் அணியை கலைத்து விட்டதாக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் தெரிவித்துள்ளபோதும், Read more »

போர் வெற்றி விழா முத்திரையை யாழில் மாகாணசபை ஊழியா்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை

“தேசிய போர் வீரர்கள்’ தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் Read more »