Ad Widget

ஐந்தாம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்க நடவடிக்கை

முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரையான பாடசாலை மாணவர்களுக்கு ஒரு நேர உணவு பெற்றுக் கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

education-viraj-kareyavasam

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன இன்று (03) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- பாடசாலை மாணவர்களில் 25- 30 வீதமானவர்கள் மந்தபோஷாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளில் பணம் அறிவிடுதல் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்- கட்டுப்பாடின்றி பாடசாலைகளில் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பாடசாலையொன்று வருடத்துக்கு 1400 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்கின்றனர்.

பணம் பெறுவதாயின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சுக்களின் அனுமதி பெறல் வேண்டும். எனினும் சுற்றுநிரூபத்திற்கு எதிராக செயற்படுவதாயின் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பில் தேசிய அதிபர்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts