Ad Widget

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் அநுராதபுரத்தில்

சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டங்கள் எதிர்வரும் 7, 8 ஆகிய தினங்களில் காலை 9.00 மணிக்கு அநுராதபுரம் சல்காது மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது என மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.

santhera-rani-pandara-women

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று காலை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- பெண்களுக்கோர் சிறந்த நாடு என்ற தொனிப் பொருளில் இம்முறை தேசிய மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. வழமையாக கொழும்பில் தேசிய மகளிர் தின கொண்டாட்டங்கள் நடைபெறும். இம்முறை கிராமிய பெண்களையும் இத்தேசிய நிகழ்வில் உள்ளடக்க வேண்டும் என்ற நோக்கில் அநுராதபுத்தில் நடத்த எமது அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்வை முன்னிட்டு சல்காது மைதானத்தில் 7ஆம் 8ஆம் திகதிகளில் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கைவினைப் பொருட்கள் என்பவற்றை காட்சிப்படுத்தி பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ள இக்கண்காடசியில 140 காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதுதவிர சட்ட ஆலோசனை சேவை- வைத்திய ஆலோசனை சேவை- தொழிற்சந்தை என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அநுராதபுரம் மட்டுமன்றி பொலன்னறுவை- வடமாகாண மகளிரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிரதமர்- உயர்ஸ்தானிகர்கள்- அமைச்சர்கள- உட்பட 6000 பேர் வரை இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts