Ad Widget

தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதியிடம் மனுக் கையளிப்பு!

யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கோரி மனு ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் நேரடியாகச் சமர்ப்பித்தனர்.

யாழ். அரச செயலகத்துக்கு சென்று இந்த மனுவை அவர்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர்.

தாதிய பயிற்சி நெறியை பூர்த்தி செய்து இறுதிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நேரத்தில் தங்களிடம் ஆங்கில பாடத்தில் திறமைச்சித்தி கோரப்பட்டு, அவ்வாறு இல்லை என்றார் இறுதிப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது என பணிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்றாண்டுகளாக பயிற்சி நெறியை தொடர்ந்த நிலையில் இறுதிவருடத்தில் இவ்வாறு நிபந்தனையை குறிப்பிடுவது தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும், தாம் வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் உரிய தகமைகளை பூர்த்தி செய்த நிலையிலேயே நேர்முகத்தேர்வுக்கு தோற்றி, தாதிய பயிற்சிக் கல்லூரிகளுக்கான அனுமதிக்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும், இந்தப்புதிய நடைமுறை காரணமாக 150க்கும் மேற்பட்ட தாதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்து, இந்த பிரச்சினைகுறித்து ஜனாதிபதி கவனம்செலுத்தவேண்டும் என்று கோரியே மனு கையளிக்கப்பட்டது.

Related Posts