- Tuesday
- July 1st, 2025

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு - விஜயராம வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக அம்பாறை மாவட்டம்...

2012ஆம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பானது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமாக இருந்த ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக நேற்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில், திருகோணமலையில் இந்த சந்திப்பிரமாணம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய...

காணி உரிமையாளரை கொலைசெய்து கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் தக்ஷிணாராமய விகாரைக்கு நடுவில் அமைந்துள்ள காணியை (படலிவத்தை) கோத்தபாய ராஜபக்ச அபகரித்தமை அம்பலமாகியுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, அரச அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்திய காணியை ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினர் நேற்று...

வடக்கு,கிழக்கு தமிழ் மக்களைப் போன்று ஏனைய மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ முகாம்கள் எந்தவிதத்திலும் அகற்றப்படாது என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன திட்டவட்டமாகத் தெரிவித்தார். நேற்று பி.ப 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பலாலி இராணுவப் படைத்தளத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற...

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி யாழ்.புத்தூர் புத்தகலட்டி ஸ்ரீ விஷ்ணு வித்தியாலய மாணவர்கள் பாடசாலை வாயிலை மறித்து வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை (06) காலை ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாணவர்களின் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தினை அடுத்து பாடசாலைக்கு சென்ற யாழ் வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன்...

இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டத்தை பகிஷ்கரிக்காது கூட்டமைப்பில் உள்ள அனைவரும் பங்குபற்றி இருக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சியைக் கட்டி எழுப்புவதற்காக புதிய அரசாங்கம் 100 நாட்களை அவகாசமாகக்கோரி உள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அமைப்பதற்காக 50 நாட்களாவது அரசாங்கத்துடன் சேர்ந்து...

கடத்தப்பட்ட வேனை போலியான முறையில் இலக்கம் மற்றும் வர்ணங்களை மாற்றி விற்பனை செய்ய முற்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க (புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்) உறுப்பினரை மட்டக்களப்பு மாவட்ட விஸேட பொலிஸ் பிரிவினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மானிப்பயை சேர்ந்த குலேநதிரன் கார்த்தீபன் என்ற குறித்த சந்தேக நபர் 56-5647 என்ற வேனைக்கடத்தி...

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 0716027912 – 0788714726 – 0777205137 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது...

காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் கவனீயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் அரசு மற்றும் அரச ஒட்டுக்குழுக்களினால் கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரியும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அண்மைக்காலங்களில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது....

நாடு முழுவதிலும் கடமையாற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதேவேளை, புதிய தபால் மா அதிபராக டீ.எல்.பீ.ஆர்.அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் பொதுச் சேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேடைக்கு அழைத்து வர வேண்டும் என மேல் மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று தீர்மானித்துள்ளனர். இந்த தீர்மானம் அடங்கிய கடிதமொன்றில் கூட்டமைப்பின்...

முன்னைய அரசாங்கத்தினால் 2,200பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் 1,800பேருக்கு இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் நேற்று வட்டு இந்து கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். வட்டுகோட்டை இந்து கல்லூரியின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று கல்வி ராஜாங்க அமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் வருகைதந்திருந்தனர். புதிய அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்று 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் நேற்றைய...

நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அவற்றுக்கிடையே இருக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை பரிந்துரை செய்ய நல்லிணக்கத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இந்த விசேட ஜனாதிபதி செயலணியானது அரசியல் கைதிகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கடந்த கால மோதல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் குறைப்பது...

மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஜனாதிபதி ஆகியிருந்தால் தொடர்ந்து 08 ஆண்டுகள் ஆட்சி புரிந்து தமிழ் மக்களின் தேசிய தனித்துவங்களை இல்லாது அழித்தொழித்து இருப்பார் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புறநெகும திட்டத்தின் கீழ் 52 மில்லியன் ரூபாய் செலவில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட நல்லூர்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவிருக்கின்றார். அவர், அங்கு 18ஆம் திகதி வரை தங்கியிருப்பார். மைத்திபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய தேவஸ்தானத்தினால் துர்க்கையம்மன் ஆலயத்தில் வாழும் பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி நிர்மாணிக்கப்பட்ட துர்க்கா மகளிர் வீட்டுத்திட்டம் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. துர்க்கையம்மன் ஆலய தேவஸ்தான தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் இருந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு வீடுகளுக்குமான...

முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருள்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தச் இடம்பெற்றுள்ளது. ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தார் எனக் கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சோதனை...

நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகம் மற்றும் கலாசார மண்டபம் ஆகியன தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, யாழ்.இந்திய துணைதூதரக அதிகாரி எஸ்.தட்சணாமூர்த்தி ஆகியோரால் வியாழக்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது. புறநெகும திட்டத்தின் கீழ் 52 மில்லியன் ரூபாய் செலவில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட 3 மாடிகளை கொண்ட கட்டடமே திறந்து வைக்கப்பட்டது....

All posts loaded
No more posts