Ad Widget

இணைந்து ஆட்சி அமைக்க வருமாறு த.தே.கூட்டமைப்புக்கு அழைப்பு

கிழக்கு மாகாணசபையில் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள 10 உறுப்பினர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்புக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த 10 உறுப்பினர்களே இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் திருகோணமலையிலுள்ள இல்லத்துக்கு திங்கட்கிழமை (2) சென்ற கிழக்கு மாகாணசபையிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினரே இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அழைப்பு விடுத்துள்ளதாக இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்ததாகவும் அந்த மாகாணசபை உறுப்பினர் கூறினார்.

Related Posts