Ad Widget

தென்னிலங்கை அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றனர் – டக்ளஸ்

தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்த்த காலம் மாற்றமடைந்து, நேசக்கரம் நீட்டி தமிழ் மக்கள் வரவேற்கும் காலம் தற்போது நடைபெறுகின்றது. அந்த மாற்றத்துக்கு முக்கிய பங்காளிகளாக நாங்கள் இருந்துள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

daklas

வடமாகாண விசேட அபிவிருத்திக்குழுக்கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு மக்கள் 30 வருடகால யுத்த அழிவின் பின்னர் நியாயபூர்வமான எதோவொன்றை எதிர்பார்க்கின்றார்கள். அரசியல் சம உரிமை, சம உரித்து இருக்கவேண்டும் என விரும்புகின்றார்கள்.

61 ஆவது சுதந்திரதின வைபவத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் ஐக்கியம், இனசமத்துவம், சகோதரத்துவத்துடன் செயற்படவேண்டும் என தெரிவித்திருந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.

கடந்தகால அரசியலில் தமிழ் தலைமைகள் யதார்த்ததை ஏற்றுக்கொள்ளாததனால் பல வாய்ப்புக்களை தவறவிட்டுள்ளனர். அபிவிருத்திக்கான முயற்சிகள் மேற்கொள்ளும் போது, எங்கிருந்து தடைகள் உருவாகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் தவறுவிட்டவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் மக்களின் குறைபாடுகளை ஆழமாக ஆராய்ந்து அவற்றை தீர்க்கவேண்டும். வடமாகாண சபையின் செயற்றிட்டங்களில் மக்கள் அதிருப்தி வெளியிடுகின்றார்கள். இது தொடர்பாக ஆராயப்படவேண்டும். வடமாகாண சபை வினைத்திறன் மிக்க சபையாக இயங்கவேண்டும். அதற்கு அதிகாரம் பலம் தேவை.

அரசியல் உரிமை பிரச்சினைக்கு உரிய திறவுகோல் ஐக்கியத்திலேயே தங்கியுள்ளது எனவே இன பகைமையை தவிர்க்கவேண்டும். கடந்த கால அரசாங்கத்துடன் பகைமையை ஏற்படுத்தியது போல, இந்த அரசுடன் பகைமையை ஏற்படுத்தித்தாது இணக்கத்துடன் செயற்படவேண்டும்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உதவியாளர்களுக்கான சேவைகள் அதிகரிக்கப்படவேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உரிய முறையில் ஆராய்ந்து தீர்க்கப்படவேண்டும் என புதிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Related Posts