Ad Widget

‘விடுதலைப்புலிகள் மீதான தடையை இலங்கை, இந்திய அரசுகள் நீக்கவேண்டும்’

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது போன்று, இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுவதன் மூலமே தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உட்பட அனைத்து விதமான பிரச்சினைககளையும் சுமுகமாக தீர்த்துக்கொள்ள முடியும் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை (03) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோர் விடயம், யுத்த இழப்புக்களை மீளப்பெறல், இறுதிப்போரின் உண்மைகளை கண்டறிதல், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், காயமடைந்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள், விதவைகளுக்கான மறுவாழ்வு, அநாதைகளாக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு, காணிகளை உரியவர்களிடம் கையளித்தல், அரசியல் தீர்வை ஏற்படுத்தல் போன்ற விடயங்களை கையாள்வதற்கு விடுதலைப்புலிகள் மீதான தடைநீக்கம் அவசியமானதொன்றாகும் என எமது அமைப்பு கருதுகிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பொன்றை எதிர்வரும் 9ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நடத்தவுள்ளோம். இவ்விடயம் தொடர்பான ஆலோசனை மற்றும் கருத்துக்களை எமக்கு தெரிவிக்க முடியும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Posts