Ad Widget

எமது வரலாற்றை மறந்துவிடக்கூடாது – குருகுலராஜா

எமது தமிழ் சமூகத்தில் முன்னைய வரலாறுகளை தற்போதுள்ள புதிய தலைமுறையினர் மறந்து வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் புதிய தலைமுறையினர் எமது பழைய வரலாற்றை மறந்துவிடாமல் இருக்கவேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார்.

உலக வங்கியின் 13 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் துணுக்காய் வலயக்கல்வி பணிமனையில் அமைக்கப்பட்ட கட்டடத்தை திங்கட்கிழமை (02) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

மாங்குளத்தில் பெரியதொரு இராணுவ முகாமிருந்தது. யுத்தம் நடைபெறும் காலத்தில் மாங்குளம் நகருக்கு வருவதற்கு அச்சமான சூழல் இருந்தது. அவ்வாறான சூழலில் இருந்து மீண்டு வந்திருக்கின்றோம். தற்போதைய சூழலை மக்கள்தான் உருவாக்கினார்கள்.

மக்கள் தமது வாக்கு பலத்தால் வடமாகாண சபையை உருவாக்கினார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்னர் இவ்வாறான நிலைமைகள் இல்லை.

வடக்கு மாகாண சபை உருவாக்கம் பெற்றதன் காரணத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் பரப்புரை செய்து பழைய ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி புதிய அரசை அமைப்பதற்கான உதவியது என்றார்.

Related Posts