- Wednesday
- July 9th, 2025

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்த புதிய தேர்தல் திருத்தச் சட்டமூல ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறையை ஜனாதிபதி நேற்று அமைச்சரவையில் சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு காவல்துறையினரால் நேற்று இரவு கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். அவரை கடுவெல மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் முன்னர் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பசில் ராஜபக்ஷவின் வழக்கறிஞர் யூ ஆர் டி...

100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய...

பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வந்து சாட்சியமளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற பின் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். இவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவரை கைது செய்யுமாறு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷ நேற்றைய...

யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினர் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக இன்றைய தினம் கண்டனப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர். மணல் சேவையில் ஈடுபடுவதற்காக மகேஸ்வரி நிதியத்திற்கு செலுத்திய தமது பணத்தை மீள வழங்குமாறு கோரியே யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்க பாரவூர்தி உரிமையாளர்கள் இன்றைய தினம் கண்டனப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர். பல்வேறு வாசகங்களை சுலோக அட்டைகளில் தாங்கியவாறு...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மீன்பிடிப்படகுகளை மீட்டுச் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 143 பேர் இன்று இலங்கை வருகின்றனர். இலங்கையில தடுத்துவைக்கப்பட்டிருந்த 87 படகுகளையும் விடுவிக்க கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. இதன்படி முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 33 படகுகள் தமிழக தரப்பினரால்...

வடமாகாண கூட்டுறவு அமைப்புக்களின் இணைந்த மே தினக் கொண்டாட்டம், இம்முறை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, மாங்குளம் நீர்ப்பாசனத் திணைக்கள மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(21) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண கூட்டுறவு ஆனையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் கே.கணேஸ் ஆகியோர்...

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை விட, ஏனைய காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி மரக்கட்டை, முட்கம்பி வேலிகளை அமைத்திருந்தனர். தற்போது அவ்வேலிகள் அகற்றப்பட்டு அவ்விடத்தில் கொங்கிறீட் தூண்கள் நாட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்படுவதால் இது நிரந்தர வேலிகளா என்றும் மீதமுள்ள தமது காணிகள் விடுவிக்கப்படாத நிலை ஏற்படலாம்...

இந்திய ரோலர்களின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துவதோடு கடற்றொழில் உபகரணங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கக் கோருதல் போன்ற 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று முற்பகல் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக வடமராட்சி கிழக்கு மக்கள் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்று வருகின்றது. நாட்டில் எமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள்...

வடக்கு, கிழக்கில் காணப்படும் பிரநிதித்துவங்கள் உட்பட சிறுபான்மை பிரதிநிதித்துவங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் மறுசீரமைப்பு அமையவேண்டும். அத்துடன் அடுத்த பத்தாண்டுகளுக்குள் எல்லை நிர்ணயம் அவசியம் இல்லை என்பதை அரசிடம் தொடர்ந்தும் வலியுறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் நடவடிக்கை, பொதுத் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இந்தச் சந்திப்புக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என முன்னாள் அமைச்சரும் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினருமான டீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்...

மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்து பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் புன்னாலைக்கட்டுவன், ஈவினை வீதியில் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான கெங்காதரன் தவக்குமார்(வயது -29) என்பவரே உயிரிழந்தார். விபத்து குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சுன்னாகத்தில்...

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான கடைகள், இரவு விடுதிகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எதிர்வரும் மே மாதம் 03, 04ஆம் திகதிகளில் மூடப்படும் என்று மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. பௌத்த மக்களால் கொண்டாடப்படும் வெசாக் வாரத்தை முன்னிட்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையில் சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கியிருந்து படிக்கக்கூடிய மண்டபமொன்று இருப்பதால் அதனை யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமாகாணத்தில் இருக்கும்...

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரின் இரத்தமாதிரிகளை எடுத்து டீஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷ பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சந்தேகநபரான...

ஏற்கனவே மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ள பகுதிகளில் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் இருக்கின்றன. அதே நேரம், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவ முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும்...

லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி லிமிடட், ரக்னா பாதுகாப்பு லிமிடட், இராணுவ சேவை அதிகார சபை மற்றும் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களும் பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உரியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு, 01.லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி லிமிடட் -...

ராஜபக்ஷ குடும்பத்தினர் ஒரு போதும் பண மோசடியில் ஈடுபட்டதில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார். அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக இலங்கையை வந்தடைந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பசில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முன்னுரிமை அளித்து...

மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை ஒரு வார காலம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களையும், தாய்த்தமிழர்களையும் முன்வருமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மே...

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தியை சீனா நிராகரித்துள்ளது. இது ஒரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என தாமரை கோபுரத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பாஸ்கர் ராய்...

All posts loaded
No more posts