- Wednesday
- September 17th, 2025

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத் தொழிற்சங்க அமைப்புகளும் இணைந்து இம்முறை மேதினத்தைக் கூட்டுறவுமேதினமாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடவுள்ளன. வெள்ளிக்கிழமை (01.05.2015) பிற்பகல் 2 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து யாழ் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கி கூட்டுறவாளர்களின் மேதின எழுச்சிப் பேரணி நடைபெறும் எனவும், 4.30 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் பொதுக்கூட்டம்...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் விரைவில் அரச வேலைவாய்ப்பை வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. 2012 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பிற்கு உள்ளீர்ப்பது பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்ததுடன் கடந்த கால தேர்தல்களின் போது பட்டதாரிகள்...

யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வீடொன்றின் கதவை உடைத்து அங்கிருந்த அலுமாரியை படி வாகனத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்ட 3 சந்தேகநபர்களை திங்கட்கிழமை (27) மாலையில் கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். வட்டுக்கோட்டையிலிருந்து வாகனத்தில் சென்ற 4 நபர்கள், வீட்டின் முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டின் கதவை உடைத்து உட்சென்று அங்கிருந்த அலுமாரியை வெளியில் கொண்டு வரமுற்பட்ட...

வடமாகாணத்தில் கிராம அலுவலர் பிரிவு தோறும் இளைஞர் கழகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக வாலிபர் நாடாளுமன்றத்தை வழிப்படுத்த அரச நிர்வாக மாகாண சபைகள் துரித நடவடிக்கையை விரைவில் எடுக்கும். இவ்வாறு அரச நிர்வாக மாகாண சபைகள் அமைச்சு செயலாளர் ஜே.தடல்லகே வடக்கு பிரதம செயலாளர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். மாகாண மட்டத்தினுள் இளைஞர் கழகத்தை...

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில், சமுர்த்தி முத்திரை மீளாய்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, மீளவும் மீளாய்வு மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரச அதிபர், யாழ்ப்பாண பிரதேச செயலாளரைப் பணித்துள்ளார். யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமுர்த்தி முத்திரை மீளாய்வு அண்மையில் நடைபெற்றது. அதன்போது பல் வேறு முறைகேடுகள்...

பொலிஸாரை கத்தியால் குத்திய சந்தேக நபர் உட்பட மூவர் மூளாய் மாவடிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் குறித்த பகுதிக்கு நேற்று மாலை சென்றுள்ளனர். சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று அவரைக் கைதுசெய்யமுற்பட்டவேளை அவர் பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திவிட்டுத்...

19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் 3/2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை நாட்டு மக்கள் பெற்ற வரலாற்று வெற்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிச்சயமாக வெளியிடப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் - ஹுசைன் தன்னிடம் உறுதியளித்தார் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த அறிக்கை...

செல்லமுத்து மைதானத்தில் சனிக்கிழமை(25) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், அதேயிடத்தைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களை திங்கட்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டில் வவுனியாவைச் சேர்ந்த ந.முரளிதரன் (வயது 23) என்ற மாணவனின் கை...

2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தான் லாகூர் நகரில் வைத்து தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் பாகிஸ்தான் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளினைத் தொடர்ந்து இச்சந்தேக நபர் உட்பட மூன்று தலிபான் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய...

மிதிபலகையில் நின்று பயணித்த தனியார் பஸ் நடத்துநர் கீழே வீழ்ந்து உயிரிழந்தமையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார். கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி சென்று கொண்டிருந்த...

கடந்த அரசாங்கத்தின் காலக்கட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கடத்திச்சென்று காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளைவேன் நடவடிக்கைகளில் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் மூவர் தொடர்பு பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தொடர்பிலான இரகசிய அறிக்கைகள் இரண்டு, அடுத்த வாரம் நடைபெறவிருக்கின்ற பாதுகாப்பு சபையில் முன்வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி,...

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு நாடாளுமன்றம் விடுமுறை வழங்கியுள்ளது.

பேக்கரி மற்றும் பேக்கரி உற்பத்தி செய்யும் இடங்களில் , தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்துகொள்வதற்காக அவ்வாறான இடங்களில் தராசு வைக்கப்படுவது கட்டாயமாகும் என்று நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார். இந்த சட்டம், பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் நிலையங்களுக்கும் கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பல்வேறான நிறைகளில் பாண்...

பெரும் போர் அழிவுகளில் சிக்கி வசதிகளற்று வாழ்க்கையை நகர்த்தும் எங்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படாது திருப்பப்பட்டமைக்கான காரணங்கள் என்ன?. எமக்கு வீட்டுத் திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கோரி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மக்கள் நேற்று கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தினர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 வரையான...

வடமாகாணத்தில் இடம்பெறும் குழு மோதல்கள், வாள் வெட்டு கலாசாரம் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொலிஸார் மற்றும் சட்டத்துறை சார்ந்தோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் தெ.இந்திர குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலை கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் கைது...

மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நேற்று திங்கட்கிழமை (27) ஆரம்பமானது. சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஜனாதிபதி மைத்திரிபால...

கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்து மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சரக்கு ரயிலுடன் ஜூப் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று இரண்டாவதுநாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்...

ஸ்ரீ லங்காவின் சுதந்திர ஜனநாயகத்தை மீண்டும் பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம், கட்சி பேதங்கள் இன்றி சகல கட்சிகளுக்கும் கிடைப்பதற்கு இன்றிலிருந்து இன்னும் ஒன்றைநாட்கள் இருகின்றன. அந்த அதிர்ஷ்டத்தை உதயமாக்கி கொள்ளுமாறு நான் சகலரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்துவதை விட வெறொரு கௌரவம் இல்லை என்றும்...

All posts loaded
No more posts