Ad Widget

யாழில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிப்பு

யாழ்.நகரில் இடம்பெறவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ். நகரில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த போராட்டத்திற்கு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதுடன் எதிர்வரும் 14 நாள்களுக்கு எந்த அமைப்பும் யாழ். நகரத்தில் போராட்டங்களோ ஒன்றுகூடல்களையோ மேற்கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று போராட்டத்தினை மேற்கொள்வதற்கு என அறிவிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு , பொது அமைப்புக்கள் ஆகியவற்றுக்கு குறித்த தடை உத்தரவுக்கான அறிவித்தல்கள் நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விசேட பாதுகாப்பு காரணமாக போராட்டத்தை நிறுத்துமாறு விடுக்கும் கட்டளை என்று அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

மேலும் யாழ். மாநகர பகுதியில் இன்று கடந்த 20 ஆம் திகதி சட்ட விரோத கூட்டத்தை கூட்டி நீதிமன்றத்திற்குள் உட்புகுந்து பொது இடங்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை சம்பந்தமாக கைது செய்து நீதிமன்றத்தின் கட்டளைப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு மறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேகநபர்களை விடுதலை செய்வதற்கும் , பிணை வழங்குமாறும் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்தினால் நடத்துவதால் மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பொது இடங்களுக்கும் பாரிய சேதத்தையும் மக்களின் அன்றாட நடவடிக்கைக்கும் இடையூறினை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இதனைக் கருத்தினைக் கொண்ட போராட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.

மீறும் பட்சத்தில் ஏற்பாட்டாளரையும் கூட்டத்தினரும் கைது செய்யப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றிலிருந்து 14 நாள்களுக்கு யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் எவ்வித கூட்டத்தையோ ,போராட்டத்தையோ நடாத்தக் கூடாது என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts