Ad Widget

கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதி ஊடாக இன்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது கைதடி வீதியால் வந்த கனரக வாகனத்தோட கோப்பாய் சந்தியில் வைத்தே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts