நீதிமன்ற வளாகத்தில் தப்பியோடி நஞ்சு அருந்திய கைதி!!

மல்லாகம் நீதவான் நீதிமன்றக் கட்டளையின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், வழக்கு விசாரணைக்காக சிறைக்காவலர்களால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தப்பியோடிய கைதியைத் தேடி மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டிருந்த வேளையில், அவர் காங்கேசன்துறை பகுதியில் வைத்து பொலிஸாரினால் சுற்றியடைக்கப்பட்டு மீளக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்ய முற்பட்ட போது அக்கைதி தான் வசம் வைத்திருந்த நஞ்சுப் பதார்த்தத்தை அருந்தியுள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அவரை மீட்புச் செய்து, சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த துடன், இச்சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலைக்கு நேரில் சென்று நிலமையை பார்வையிட்ட மல்லாகம் நீதவான், சந்தேகநபரின் விளக்கமறியலை வரும் 20ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

தற்போது குறித்த விளக்கமறியல் கைதி, சிறைக்காவலர்களின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related Posts