- Wednesday
- July 9th, 2025

திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச தமிழ் விவசாயிகள், தங்களது காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடுக்கக் கோரி திங்கட்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதுார் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தங்களது காணிகளில் அத்துமீறி நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றி அங்கே தாங்கள் வேளாண்மை செய்யக் கூடியச் சூழல் ஏற்படுத்தப்பட...

ராமேஸ்வரம் தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல்பகுதிக்கு வந்து இறங்கிய அகதியை சிறையில் அடைக்க நீதி மன்றம் உத்தரவு இட்டுள்ளது நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமேஸ்வரம் அருகே தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல் பகுதியில் திரிகோணமலைப்பகுதியைச் சேர்நத சத்தியசீலன(50) இவரது மனைவி பரமேஸ்வரி( 41) மகள்கள் மேரி(18) அஞ்சலிதேவி(15)விடுதலைசெல்வி (13) ஆகியோர் மன்னார் மாவட்டம் பேச்சாளைப் பகுதியல் இருந்து இலங்கை...

வளலாய் பகுதியில் அண்மையில் மீள் குடியேறிய தாம் வெடி பொருட்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மக்கள், கடந்த மாதம் வளலாய் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். அதனை அடுத்து அப்பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து சொந்த இடங்களில் மீள் குடியேறி வருகின்றார்கள். தாம் காணிகளை துப்பரவு செய்யும் போது...

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு குறித்து வடக்கு மாகாண முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் கேட்டு கடிதம் எழுதினோம். அதற்கு அவர் நீண்ட நாள்களாகியும் பதில் தரவில்லை. - இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் யாழ். மாவட்ட மருத்துவர் சங்கத்தின் தலைவர் முரளி வல்லிபுரநாதன். சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ளமை சம்பந்தமான...

வலிகாமம் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் வட மாகாண நிபுணர் குழுவில் நீர் மாசு குறித்த நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லை என களனி பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் வைத்தியகலாநிதி குமரேந்திரன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆவண இறுவட்டு...

வடக்குமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் சுன்னாகம் பகுதி நிலக்கட்டமைப்பை ஆராயும் நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுன்னாம் மின்சார நிலையப் பகுதியில் உள்ள பிரதேசத்தில் கழிவு ஒயில் நிலத்தில் கலந்துள்ளமை தொடர்பில் ஆராயும் பெருட்டு ராடர் கருவி மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட ராடர் கருவியின் உதவியுடன், தொழில் நுட்பவியலாளர்களை...

யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் அராலிப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் 26,29 வயதுடையவர்கள் என்றும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த நபர்கள் கொடுத்த வாக்குமூலத்தால் களவாடப்பட்ட 10 துவிச்சக்கர வண்டிகளை யாழ்ப்பாண பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக...

தமிழகத்தின் தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனை பகுதியில் கரைசேர்ந்த இலங்கை தம்பதியினர் மற்றும் அவர்களது மூன்று இளவயது மகள்மார் உட்பட ஐவரை கைது செய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பேசாலை பகுதியிலிருந்து 25,000 இலங்கை ரூபாயை வழங்கி படகு மூலம் இவர்கள் தமிழகத்தை வந்தடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை அரிச்சல்முனையருகே இறக்கிவிட்ட படகோட்டிகள் மீண்டும் மன்னாரை...

கொழும்பிலிருந்து ரயில் மூலம் யாழ்ப்பாணம் வரும் அனைத்துப் பயணிகளும் தத்தமது இடங்களிற்கு செல்வதற்கு வசதியாக இலங்கை போக்குவரத்துச்சபையின் யாழ்.சாலையினால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாண ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களின் நேரத்திற்கும் எற்ப 776 பாதை வழியே குறிகட்டுவானுக்கும், 777,780 பாதைகள் வழியே ஊர்காவற்றுறைக்கும், 788 பாதை வழியே இளவாலைக்கும் 789...

இலங்கைக் கிரிக்கெட் சபைக்கான நிதி உதவியை சர்வதேச கிரிக்கெட் சபை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இலங்கைக் கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகரித்த அரசியல் தலையீடுகளே நிதி நிறுத்தப்பட்டமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு கலைந்தது. இந்நிலையில் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்ட்டது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை...

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அரசு இதுவரையில் தகவல்களை வெளியிடவில்லை. எனவே, அது தொடர்பில் விவரங்கள் வெளியான பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்றும்...

இலங்கை அரசியலில் அடுத்த வாரம் தீர்க்கமான சில தீர்மானங்களை எடுக்கும் வாரமாக அமையப் போகின்றது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா? அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? என்ற கேள்விகள் இலங்கை அரசியலை ஆக்கிரமித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகி பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தில் போட்டியிடுவாரென்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இது தொடர்பில்...

வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இலங்கை வந்துள்ள வரதராஜப்பெருமாள் தாம் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட உத்தேசித்துள்ளார்...

அரசியலமைப்பில் மேற்கொள்ளவுள்ள 19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள்,கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் அதிகாரங்கள் சிலவற்றை குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 19ஆவது திருத்தத்துக்காக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தத்துக்கே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. 19ஆவது திருத்தத்தில் சில உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்து,...

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வீமன்காமம் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் அங்கு தமது காணிகளை துப்புரவு செய்யச் சென்ற மக்கள் தாங்கள் காலம் காலமாக வணங்கிவந்த பிள்ளையார் ஆலயத்தை காணாது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள். குறிப்பாக குறிப்பிட்ட பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் தற்போதும்...

சமூக சேவைகள் அமைச்சினால் ஊனமுற்றோரின் நலன்களை வடமாகாணத்தில் பேணக்கூடிய பிராந்திய நிலையமொன்று மிக விரைவில் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராய அமைச்சின் திட்டப்பணிப்பாளர் ஆர்.இராமமூர்த்தி அண்மையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களுக்கு வருகை தந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மேற்படி 03 மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த போது ஊனமுற்றோரின் தேவைகள் குறித்து கேட்டறிந்து...

பொருட்களின் நிறைகளை நுகர்வோர் சரியாக தெரிந்து கொள்ளும் வகையில் நாடாளவிய ரீதியில் இயங்கும் ஒவ்வொரு விற்பனை நிலையம் மற்றும் பேக்கரிகளிலும் பிரத்தியேகமாக தராசு ஒன்று கட்டாயம் வைக்கப்படல் வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறைச்சட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டாயமாக்கப்படும் என...

வலிகாமம் வடக்கு பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட காணிகளில் மீள் குடியேற்றம் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவர்களது கூற்றுக்கள் எமது மக்களை மீள்குடியேற்ற விடயத்திலும் குழப்புவதாகவே அமைந்துள்ளன என கூறியுள்ள...

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இன்று (18) மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சில பிரதேசங்களில் இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் திருகோணமலை பொத்துவில் வழியாக மட்டக்களப்பு புத்தளம் கொழும்பு முதலான கடலோரங்களில் காலையில் மழைக்கான...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை செயலகத்தில் நடைபெற்றது. இந்தத் சந்திப்பின் போது தற்போது அரசாங்கத்தால் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட ஆயிரத்து 100 ஏக்கர் காணிகளில் இராணுவத்தின் நான்கு பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து சுரேஷ் எம்.பியால்...

All posts loaded
No more posts