Ad Widget

யாழ். நீதிமன்றம் மீது தாக்குதல்: வடக்கு சட்டத்தரணிகள் இன்று செயற்பாடுகளை புறக்கணிக்கின்றனர்! கைதானவர்களுக்காகவும் ஆஜராகார்!!

யாழ். நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை வட மாகாண சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களுக்காகவும் வட மாகாணத்தைச் சேர்ந்த எவரும் நீதிமன்றில் முன்னிலையாகமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நீதிமன்றக் கட்டடத்தில் வட மாகாண சட்டத்தரணிகள் சங்கத்தினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டன.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு :-

மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்து நேற்றுப் புதன்கிழமை நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த ஒரு தொகுதியினர் அநாகரிகமான முறையில் – சட்டத்துக்கு புறம்பான விதத்தில் நடந்து கொண்டனர்.

இவ்வாறு நடந்த 129 பேரை பொலிஸார் கைது செய்தனர். இவர்களுக்காக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் வாதாட முன்வரமாட்டார்கள். தவிர இவர்களின் அநாகரிமான செயற்பாட்டைக் கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள். மேலும் கொலையான வித்தியாவின் குடும்பத்தார் சார்பாக அனைவரும் இலவசமாக நீதிமன்ற வழக்குகளில் பங்கெடுப்போம் என்றும் தெரிவித்தனர்.

Related Posts