- Thursday
- November 13th, 2025
யாழ்ப்பாணம் நகரப் பகுதயில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைகளின முன்பாக போதைப் பொருள் வியாபாரம் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் பாடசாலை முடிவடையும் நேரத்திலும் இடம்பெறுகின்றது. இதற்கெதிராக யாழ்ப்பாணப் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர். என யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் யாழ்ப்பாணப் பிரதேச செயலர் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்...
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் கன மழை (100 மி.மீ மேல்) பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இருக்கும் பலாலி இராணுவமுகாமின் நுழைவு வாசலுக்கு முன்பாக வசாவிளான் மக்கள்கற்பூரமேற்றி வைரவக் கடவுளை வழிபட்ட சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (05.05.2015) நடைபெற்றுள்ளது. வசாவிளான் பலாலி இராணுவக்குடியிருப்பு என்று பொறிக்கப்பட்ட வளைவில் இருந்து உள்நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்தினுள்வசாவிளான் ஞானவைரவர் ஆலயம் உள்ளது. பெரிய வைரவர் ஆலயங்களில் ஒன்று...
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள போதைப்பாவனை, வாள்வெட்டுக் கலாசாரம் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். குடாநாட்டு நிலைமைகளை ஆராயும் விசேட கூட்டம் யாழ். அரச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத்...
தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,அரியனேந்திரன் ,பொன் செல்வராசா மற்றும் அமீர் அலியுடனான காரசாரமான விவாதம் உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகிறது.
வல்வெட்டித்துறை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியை சேர்ந்த சிவனடியார் நவரட்ணம் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்;. வல்வெட்டித்துறை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுவருவதால், இவர் அங்கு தண்ணீர் பந்தல் அமைந்திருந்தார். இந்த நிலையில்,வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு முன்பாகவுள்ள வீதிக்கு இவர்...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராபக்ஷவுக்கான விளக்கமறியல், மே மாதம் 7 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திவிநெகும நிதி மோசடி தொடர்பில் அவருடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் விளக்கமறியலும் 7ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கான...
வெதுப்பகம் மற்றும் வெதுப்பக உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும்...
யாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக, வீதியில் நின்ற வயோதிபரை கூலர் ரக வாகனம் மோதியதில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கூலர் ரக வாகனம் மோதியதில் உரும்பிராய் தெற்கு சேர்ந்த சீனியர் ஞானம் (வயது 55) என்பவர் உயிரிழந்தவராவார். இதனையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொதுமக்கள், கூலர் ரக வாகனத்தை பெற்றோல் ஊற்றி கொளுத்த முற்பட்டனர். அவ்விடத்துக்கு...
தனியார் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற நோயாளிகளுக்கு, வழங்கும் மருந்துகள் மற்றும் பயன்படுத்தும் வைத்திய உபகரணங்களின் விலைகளை குறிப்பிட்டு கட்டணப்பட்டியல் விநியோகிக்கப்படவேண்டும் என்று நுகர்வோர் அதிகார சபை, தனியார் வைத்திய நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது. சில தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு வழங்குகின்ற கட்டணப்பட்டியிலில் மருந்து மற்றும் வைத்திய உபகரணங்களின் விலைகள் உண்மையான விலைகளை விடவும் கூடுதலான விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள்...
பப்புவா நியூகினி தீவில் இன்று செவ்வாய்க்கிழமை 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தோனேசியா மற்றும் சுலைமான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூகினியா தீவில் ராபாலுவுல நகரத்திலிருந்து தெற்காக 15 கிலோமீற்றர் தூரத்திலேயே ஜி.எம்.டி நேரப்படி 1.40க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த சுனாமி...
சுன்னாகம், மல்லாகம் பகுதியில் மழை பெய்துகொண்டிருந்த சமயம் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் வீதியால் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் பலியாகினர். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை 2.45 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் மல்லாகம்,கல்லாரையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ரஜீவன் (வயது 29) இவரது மகனான ரஜீவன் நிருஜன்(வயது 08) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். காற்றுடன் கூடிய...
அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைப்பார் என அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 271 பிரதேச சபைகள், 41 நகர சபைகள், 23 மாநகர சபைகளைக் கொண்ட உள்ளூராட்சி சபையில் பெரும்பாலனவற்றின் ஆட்சிக் காலம் கடந்த ஒக்ரோபர் மாதத்துடன் முடிந்து விட்டது. இவற்றுக்கான தேர்தல் உள்ளூராட்சி...
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இரு வாரங்களுக்குள் ஆராய குழு ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்துள்ளது எனத் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று முற்பகல் 10 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் எதிர்வரும் 6ம் திகதி புதன்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ள கட்சியின் தலைவர்கள் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கை மற்றும் எதிர்வரும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு, பூரண திருப்தியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 43 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பு...
பலாப்பழத்தின் சுளைச்சவ்வு தொண்டையில் சிக்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக பகுதியைச் சேர்ந்த எஸ்.தனுசன் (வயது 08) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 01ஆம் திகதி பலாப்பழம் உண்ட சிறுவன் சவ்வு சிக்கி மூச்சுத்திணறியதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்....
வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீரபாகு கனகசுந்தரசுவாமிக்கு பதிலாக புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் வடமாகாண சபை உறுப்பினராக தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், கனகசுந்தரசுவாமி கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி இயற்கையெய்தினார். இவரது இடம் வடமாகாண சபையில் கடந்த மூன்று மாதகாலமாக வெற்றிடமாகவே இருந்து வந்தது....
மல்லாகம் சந்தி கே.கே.எஸ் வீதியால் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவனை நேற்று சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், வாளால் வெட்டியதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். மல்லாகம் மகாவித்தியாலய உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் க.பிரசன்னா (வயது 19) என்ற மாணவன் தலையில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை...
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் உடல் நிலை தேறிவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீர் சுகவீனமுற்ற நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, நேற்று சனிக்கிழமை (02) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல்களை ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளி அடிகளார்...
Loading posts...
All posts loaded
No more posts
