- Wednesday
- September 17th, 2025

நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை வியாழக்கிழமை (23) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தனர். அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்றை வீதியில் கடமையில் இருந்த நெல்லியடி பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். அவ்விடத்துக்கு வந்த பிறிதொரு நபர் தனக்கு நெல்லியடி பொறுப்பதிகாரியை...

வலிகாமம் வடக்கில் கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக வீமன்காமம் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு தயாராகும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 1 ½ இலட்சம் ரூபாய் பெறுமதியில் தற்காலிக கொட்டகை அமைக்கத் தேவையான உபகரணங்கள் வியாழக்கிழமை (23) வழங்கப்பட்டது. சங்கானையைச் சேர்ந்த பசுமைப் புரட்சியாளன் செ.கோபாலகிருஷ்ணன் என்பவர் வழங்கிய உதவியானது...

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பதையே நாங்கள் அதிகம் விரும்பினோம். ஆதலால், 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்காக அதிகம் செய்யவில்லையென்பது எங்களுக்கு ஏமாற்றமாக இல்லை' இவ்வாறு வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழமையுடன் (23) முடிவடைந்துள்ளமையை அடுத்து, இந்த 100 நாட்கள் தொடர்பில்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்றுமுன்னர் சென்று பார்வையிட்டார்.

இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி நடாத்தும் இயல் இசை நாடக விழா எதிர்வரும் 30ம் திகதி தொடக்கம் 4 ம் திகதி வரை இலங்கைவேந்தன் கலைக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக குறுந்திரைப்பட போட்டியொன்றை நடத்த சுற்றாடல் இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. இயற்கை வரைந்த ஓவியம் என்ற தலைப்பில் இக்குறுந்திரைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது. அதிகூடியது 5 நிமிடங்களில் சுற்றாடல் தொடர்பில் இக்குறுந்திரைப்படங்களை தயாரித்து அனுப்ப முடியும். ஒரு போட்டியாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை அனுப்ப முடியும். ஒரு டிவிடியில்...

சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமை மாற்ற யோசனை ஒன்று தேசிய நிறைவேற்றுச் சபையில் நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு தரப்பும் எதிர்ப்பை வெளியிடவில்லை என்றும், தமது கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தன என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார். தேசிய நிறைவேற்றுச் சபையில்...

சர்ச்சைக்குரிய பாலியல் வழக்குக் குற்றவாளியான சுவாமி பிரேமானந்தாவின் சகாக்கள் மூவரை புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றார் என்று செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், வடக்கு முதல்வரின் கோரிக்கை குறித்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் வெளியிட்டிருக்கின்றன. திருச்சியில் ஆச்சிரமம் அமைத்து செயற்பட்டு...

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாற்றப்பட்டுள்ளது. அரசியல் வாதி ஒருவரின் தனிப்பட்ட காரணத்திற்காகவே இந்த மாற்றம் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சபைக்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் போக்குவரத்து சபையினர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஏற்கனவே வடபிராந்திய முகாமையாளராக இருந்த...

வடக்கு மாகாணசபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிதி நிறுவனங்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை, வடக்கு மாகாண சபை இது குறித்த தீர்மானம் ஒன்றை சபை அமர்வின்போது...

உணவு உண்பவர்கள் போன்று சென்ற சிலர் மாற்றுத்திறனாளி ஒருவர் உட்பட இரு பணியாளர்களை கடுமையாகத் தாக்கியதுடன் வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளனர். சாவகச்சேரியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவின் மல்லாவியைச் சேர்ந்த மருது லோஜன் (வயது 28), மாற்றுத்திறனாளியான ரஞ்சித் (வயது 37) ஆகியோர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். முன்பு இருந்த...

யாழ்.நாவாற்குழி சந்தியில் வியாழக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். நாவற்குழி சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றுவதற்காக காத்திருந்த பஸ் மீது, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் பின்பக்கமாக மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் 2 பேர்...

நாட்டு மக்கள் தொடர்ந்தும் அடிமை நிலையில் வைத்திருக்க விரும்பும் சிலரே நாட்டில் குழப்பத்தை தோற்றுவித்து வருவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு நேரடியாக உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிறுபான்மை சமூகங்களுக்கு சிறப்புச் சலுகை வழங்குவதாகவும் வடக்கில் இராணுவம்...

திவிநெகுமவின் கீழ் அனைத்து நிதியும் மக்களுக்கு உதவுவதற்காகவே செலவிடப்பட்டுள்ளது. அது தவறு எனின் மக்களுக்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பஷில் ராஜபக்வின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் நல்லாட்சிக்குப் பதிலாக வைராக்கிய ஆட்சி தற்போது தோன்றியுள்ளதாகவும், மக்கள்வாத ஆட்சியை...

சுஹாசினி சமீபத்தில் கூறிய கருத்து ஒன்று பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டது. இவர் ‘Mouse’ பிடிக்க தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதக்கூடாது என்று ஒரு மேடையில், கூற இந்த பிரச்சனை இணைய விமர்சகர்களை கோபம் அடைய செய்தது. இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு வார பத்திரிக்கையில் உத்தம வில்லன் படத்திற்காக பேட்டியளித்துள்ளார். இதில் சுஹாசினி கூறியது...

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் எஸ்.கே.எம்.டீ தர்ஷனீ குணதிலக்கவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்வைத்த இக்கோரிக்கைக்கு அமைச்சரவை நியமனம் வழங்கியது.

யாழ்.நகரிலுள்ள தனியார் நிறுவனங்களினூடாக பொதிகளை பரிமாறுவதில் தவறுகள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி வசந்தசேகரன் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அண்மையிலும் இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்விரண்டு முறைப்பாடுகளும் யாழ்.நகரிலுள்ள தனியார் பொதிகள் சேவைகள் மீதே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த வகையில்...

தகவலறியும் உரிமை சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 100 நாள் திட்டத்தின் ஊடாக தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என மைத்திரி அரசு தெரிவித்திருந்தது. எனினும் 100 நாள் இன்றுடன் முடிவடைகின்ற நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் தகவலறியும் உரிமை சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அந்த...

யாழ்.மாவட்டத்தின் தனியார் துறையில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு இளைஞர், யுவதிகளை சேர்த்துக்கொள்ள யாழ்.வணிகர் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் யாழ். வணிகர் கழகத்திடம் விண்ணப்பிக்க முடியும் என வணிகர் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். தனியார் துறைகளில் கணனி இயக்குநர், விற்பனையாளர்கள், வெளிக்கள அலுவலர், கணக்குப் பதிவாளர்கள், லிகிதர்கள், விற்பனை...

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்ந்து விளக்கமளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கோரியதற்கிணங்க அவருக்கு 90 நாள்கள் கால அவகாசம் வழங்கியது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை முன்னிலையாகினார்....

All posts loaded
No more posts