Ad Widget

மூன்று தினங்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும்

இடை அயன ஒடுங்கல் வலயம், வடக்கு பகுதிக்கு மேல் காணப்படுவதால் தற்போது மழை வீழ்ச்சி காணப்படுகின்றது. இது தற்போது நாட்டை கடந்து செல்வதால் தொடர்ந்து மூன்று தினங்கள் இவ்வாறு சீரற்ற காலநிலை தொடரும் என்று திருநெல்வேலி பிராந்திய வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் நேற்றய தினம் தெரிவித்தார்.

இடை அயன ஒடுங்கல் வலயமானது தற்போது நாட்டை விட்டு கடந்து செல்ல ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இது தற்போது வடக்கு பகுதிக்கு மேல் காணப்படுவதால் இக்காலநிலை நிலவுகின்றது. அது இன்னும் மூன்று தினங்களில் சுமுகமான காலநிலைக்கு திரும்பும்.

கடந்த 11ஆம் திகதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை(17) காலை 11.30 மணி வரைக்கும் 172.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனைவிட கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (17) வரையில் 293.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது கடந்த வருட மே மாதம் வரையான மொத்த மழை வீழச்சியைவிட இரண்டு மடங்கிலும் அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Posts