Ad Widget

20 கிலோ கஞ்சா மீட்பு

பருத்தித்துறைமுனை கடற்கரைப் பகுதியிலிருந்து 20 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பொதியொன்று ஞாயிற்றுக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவான் பி.தந்தநாராயண தெரிவித்தார். கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கஞ்சா மீட்கப்பட்டது. மேற்படி பகுதியில் கஞ்சா பொதியிருப்பதை அவதானித்த இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின்...

சாவகச்சேரியில் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் படுகாயம்

சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த செல்வராசா உதயராசா (வயது 34) என்பவரே படுகாயமடைந்தவராவார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வீட்டில் இருந்த குடும்பஸ்தரை வெளியில் அழைத்த 6 பேர் கொண்ட குழுவினர்,...
Ad Widget

சிற்றுண்டி விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து சிற்றுண்டி உணவுகளின் விலைகளைக் குறைத்து விற்பனை செய்ய வியாபாரிகள் முன்வந்துள்ளதாக யாழ்.வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அதன்படி யாழ்.நகரில் இயங்கும் ஏ தர உணவு நிலையங்களில் 15 ரூபாவுக்கு விற்ற தேநீர் 10 ரூபாய்க்கும், 30 ரூபா விற்ற பால் தேநீர் 25 ரூபாய்க்கும், பசுப்பால் தேநீர் 30...

சந்தேகநபர்கள் விசாரணைக்காலம் 48 மணித்தியாளங்களாக நீடிப்பு

சந்தேகநபர்களை 24 மணித்தியாளங்கள் தடுத்துவைத்து விசாரிக்கும் சட்டத்தை 48 மணித்தியாளங்களாக புதிய அரசு நீடித்துள்ளது. கொலை மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை தற்போது 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கலாம் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். இதே வேளை இச் சட்டத்தை முன்னைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய போது அதற்கு ஐக்கிய...

உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் அமோக நெல் விளைச்சல்

கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை அமோக விளைச்சலைப் பெற்றுள்ள நிலையில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (06.02.2015) அறுவடை விழா நடைபெற்றுள்ளது. மத்திய கல்வி அமைச்சால் விவசாய வளாகப் பாடசாலை என அங்கீகாரம் பெற்ற உருத்திரபுரம் மகா வித்தியாலயம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 3...

காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க மகிந்தவின் ஜோதிடரை நாடவுள்ள ரணில்!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க ஜோதிடர்களையே நாடவேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் காணாமல் போன ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட...

பொலிஸாருக்குரிய அதிகாரங்கள் இராணுவத்திடம்: மக்கள் அச்சம் – டக்ளஸ்

பொலிஸாருக்குரிய அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்கியிருப்பதன் காரணத்தால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு விதமான அச்சமும் அதேநேரம் சந்தேகமும் எழுந்துள்ளது, எனவே இந்நிலைமை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வில் இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டம்...

முன்னாள் அமைச்சர்களுக்கு இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள்

மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்க புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இவர்களுக்கு அந்தந்த அமைச்சுக்களின் ஊடாக வாகனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் அதற்கான எரிபொருளையும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி...

இலங்கையின் மாற்றங்களை வரவேற்கிறது அமெரிக்கா!

இலங்கையில் வெளிப்படைத்தன்மை மிக்க ஜனநாய சமூகத்தை ஏற்படுத்த உதவும் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் சூசன் ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவின் தேசிய பாதுகாப்பு கொள்கை குறித்த தனது உரையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். மாற்றத்தை சந்தித்திருக்கும் இலங்கை, மியன்மார், துனீசியா போன்ற நாடுகளுக்கு நாங்கள் உதவுவோம்...

இலங்கையின் முடிவுக்கு சீனா வரவேற்பு

கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தெற்காசியாவில் சீனாவின் கடல்சார் புதிய பட்டுப்பாதை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முக்கிய சகாவாக விளங்குகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசு எங்களை துன்புறுத்துகிறது – நாமல்

'அன்று போலவே இன்றும் நாம் மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறோம். தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் என்னையும் எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்க முடியும். புதிய அரசாங்கம் எங்களை அரசியல் ரிதியில் துன்புறுத்தி வருகின்றது' என்று ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி – பிள்ளையான் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு - விஜயராம வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக அம்பாறை மாவட்டம்...

முகா.வின் ஆட்சியமைப்பு, மக்கள் ஆணைக்கு முரணானது – சம்பந்தன்

2012ஆம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பானது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன்...

கிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமாக இருந்த ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக நேற்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில், திருகோணமலையில் இந்த சந்திப்பிரமாணம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய...

உரிமையாளரை கொலைசெய்து காணியை கையகப்படுத்திய கோத்தா

காணி உரிமையாளரை கொலைசெய்து கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் தக்ஷிணாராமய விகாரைக்கு நடுவில் அமைந்துள்ள காணியை (படலிவத்தை) கோத்தபாய ராஜபக்ச அபகரித்தமை அம்பலமாகியுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, அரச அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்திய காணியை ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினர் நேற்று...

படை முகாம்கள் அகற்றப்படாது :பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடக்கு,கிழக்கு தமிழ் மக்களைப் போன்று ஏனைய மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ முகாம்கள் எந்தவிதத்திலும் அகற்றப்படாது என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன திட்டவட்டமாகத் தெரிவித்தார். நேற்று பி.ப 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பலாலி இராணுவப் படைத்தளத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற...

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி மாணவர்கள் போராட்டம்

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி யாழ்.புத்தூர் புத்தகலட்டி ஸ்ரீ விஷ்ணு வித்தியாலய மாணவர்கள் பாடசாலை வாயிலை மறித்து வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை (06) காலை ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாணவர்களின் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தினை அடுத்து பாடசாலைக்கு சென்ற யாழ் வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன்...

சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்ககேற்றிருக்க வேண்டும்

இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டத்தை பகிஷ்கரிக்காது கூட்டமைப்பில் உள்ள அனைவரும் பங்குபற்றி இருக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சியைக் கட்டி எழுப்புவதற்காக புதிய அரசாங்கம் 100 நாட்களை அவகாசமாகக்கோரி உள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அமைப்பதற்காக 50 நாட்களாவது அரசாங்கத்துடன் சேர்ந்து...

முன்னாள் புலி உறுப்பினர் கைது

கடத்தப்பட்ட வேனை போலியான முறையில் இலக்கம் மற்றும் வர்ணங்களை மாற்றி விற்பனை செய்ய முற்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க (புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்) உறுப்பினரை மட்டக்களப்பு மாவட்ட விஸேட பொலிஸ் பிரிவினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மானிப்பயை சேர்ந்த குலேநதிரன் கார்த்தீபன் என்ற குறித்த சந்தேக நபர் 56-5647 என்ற வேனைக்கடத்தி...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லையாயின் முறையிடவும்

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 0716027912 – 0788714726 – 0777205137 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது...
Loading posts...

All posts loaded

No more posts