Ad Widget

வித்தியா படுகொலை சந்தேகநபர்களிடம் எதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை?

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை வெறுமனே படுகொலையாகவோ, வன்புணர்வு நிகழ்வாகவோ எடுக்க முடியாது. வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரது சடலம் இருந்த கோலம், இது வெறும் வன்புணர்வு, படுகொலை என்பதைக் காட்டி நிற்கவில்லை. எனவே, இவ்வழக்கில் உண்மை நிலை என்னவென்று கண்டறியப்பட வேண்டும். அதற்கு சந்தேக நபர்கள் உரிய முறையில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட வேண்டும். அதற்காகவே, சந்தேக நபர்களை 30 நாட்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்து விசாரிப்பதற்கான ஆணையை நீதிபதி வழங்கியிருந்தார் என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்துள்ளார்.

thavaraja-court

நாட்டில் பொதுவான சட்டங்கள் அமுலில் இருக்கும் போது, விசேடமாகக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வித்தியா படுகொலை சந்தேக நபர்களுக்கான விசாரணை மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில், பலருக்கும் பல்வேறு விதமான ஐயங்கள் எழுந்துள்ள நிலையிலேயே, அது தொடர்பான தெளிவு படுத்தல்களை சட்டத்தரணி தவராஜா முன்வைத்துள்ளார்.

வித்தியா வழக்கின் தீர்ப்பை பலரும் எதிர்பார்த்துள்ளார்கள். இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பானது அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வித்தியா வழக்கின் பின்னணியில் பல தரப்பினரும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அரசியல் இலாபங்களுக்காக சிலர் செயற்படுவதாகவும், இந்த வழக்கை யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும், அவ்வாறு மாற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் சட்டத்தரணி தவராஜா மேலும் தெரிவித்தார்.

Related Posts