Ad Widget

பொதுத்தேர்தலுக்குப் பின் எரிபொருள் விலை உயரும்! – பந்துல

பொதுத்தேர்தலின் பின்னர் நிச்சயமாக எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கட்டாயமாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

தற்போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லீற்றர் பெற்றோல் விற்பனையின் மூலம் 30 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நட்டத்தை நாட்டின் பொதுமக்களே ஏற்றுக்கொள்ள நேரிடும். உலக சந்தையில் எரிபொருட்ளுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளன. இதனால் எரிபொருள் விற்பனையின் மூலம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியன் எரிபொருள் விற்பனை நிறுவனம் விநியோகத்தை அரைவாசியாக குறைத்துக் கொண்டுள்ளது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் இவ்வாறே சென்றால் வருட இறுதியில் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 150 ரூபாவாக உயர்வடையும் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related Posts