- Wednesday
- September 17th, 2025

மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்து பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் புன்னாலைக்கட்டுவன், ஈவினை வீதியில் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான கெங்காதரன் தவக்குமார்(வயது -29) என்பவரே உயிரிழந்தார். விபத்து குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சுன்னாகத்தில்...

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான கடைகள், இரவு விடுதிகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எதிர்வரும் மே மாதம் 03, 04ஆம் திகதிகளில் மூடப்படும் என்று மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. பௌத்த மக்களால் கொண்டாடப்படும் வெசாக் வாரத்தை முன்னிட்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையில் சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கியிருந்து படிக்கக்கூடிய மண்டபமொன்று இருப்பதால் அதனை யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமாகாணத்தில் இருக்கும்...

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரின் இரத்தமாதிரிகளை எடுத்து டீஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷ பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சந்தேகநபரான...

ஏற்கனவே மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ள பகுதிகளில் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் இருக்கின்றன. அதே நேரம், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவ முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும்...

லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி லிமிடட், ரக்னா பாதுகாப்பு லிமிடட், இராணுவ சேவை அதிகார சபை மற்றும் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களும் பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உரியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு, 01.லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி லிமிடட் -...

ராஜபக்ஷ குடும்பத்தினர் ஒரு போதும் பண மோசடியில் ஈடுபட்டதில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார். அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக இலங்கையை வந்தடைந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பசில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முன்னுரிமை அளித்து...

மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை ஒரு வார காலம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களையும், தாய்த்தமிழர்களையும் முன்வருமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மே...

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தியை சீனா நிராகரித்துள்ளது. இது ஒரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என தாமரை கோபுரத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பாஸ்கர் ராய்...

தமிழறிஞரும் மூத்த ஆசிரியருமான ம.கங்காதரம் அவர்களின் “தமிழ் எழுத்துக்கள் நேற்று - இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 19.04.2015 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் த.சிறீஸ்கந்தராசா வரவேற்பரை நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன் அவர்கள் நூலாசிரியர் ம.கங்காதரம்...

வடக்கு மாகாணத்திலிருந்து இந்தியா சென்று பட்ட மேற்படிப்புக்கள், கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது யாழ். இந்தியத் துணைத்தூதரகம். இதுகுறித்து தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: வடமாகாணத்திலிருந்து சென்று இந்தியாவில் இந்திரவியல், கட்டடவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பாரம்பரிய கலைகள் உட்பட அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளை அல்லது...

யாழ்.நாவலர் வீதியில் புகையிரதக் கடவையின் அருகிலுள்ள பாரிய பள்ளத்துக்குள் நாளாந்தம் பெருமளவான வாகனங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. புகையிரதப் பாதையின் கீழாக வாய்க்கால் அமைக்கும் பொருட்டு பாரிய பள்ளம் தோண்டப்பட்டது. புகையிரத பாதை அமைக்கப்பட்ட பின்னர், தோண்டப்பட்ட பள்ளம் முழுவதுமாக மூடப்படவில்லை. இதனால் வீதியின் அருகில் பாரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் செல்லும்...

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ, சற்று நேரத்துக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் இருமருங்குகளிலும் காத்திருக்கின்றனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரசிங்க மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோர் இணைந்து புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவு இயங்கிய கட்டடத்திலேயே புள்ளி விபரத்...

இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை தனது பிரதான மே தினக் கூட்டத்தை இணைந்த வடக்கு - கிழக்கின் தலைநகரமான திருகோணமலையில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அதற்குரிய ஏற்பாடுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோர்...

வடமாகாணத்தில், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம், வடமாகாண சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அலுவலக தகவல் தெரிவிக்கின்றது. முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களை இரு பிரிவுகளாக பிரித்து, கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 ரூபாயும், இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது. கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும்...

போர் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றங்கள் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லை. போரால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான அபிவிருத்திகளும் முழு அளவில் மக்களைச் சென்றடையவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் இயங்கும் புலம்பெயர் மக்களின் அமைப்பான அன்னை திரேசா நற்பணி மன்றம், யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை...

முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட கறையாகும் என தேசிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியது.

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவியை கொடுத்தமை இலஞ்சம் என்றால், அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சமாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஹம்பேகமுவ விஹாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில்...

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவது, சீமெந்து ஏற்றிய நிலையில் வீதியில் தரித்து நின்றிருந்த பாரவூர்தி மீது பேருந்து மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்தின் சாரதியும், நடத்துநரும்...

All posts loaded
No more posts