Ad Widget

புங்குடுதீவில் மாணவி சடலமாக மீட்பு! மாணவர்கள் வீதி மறியல் போராட்டம்!!

புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் இன்றுமதியம் கண்டன ஆர்ப்பாட்டம் பாடசாலை மாணவ, மாணவிகள், பொதுமக்களினால் நடாத்தப்பட்டது. இதன்போது புங்குடுதீவின் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்ததுடன், போக்குவரத்தை வழிமறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கல்வித் திணைக்கள அதிகாரி குயின்ரன்ஸ், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன், விந்தன், வேலணை பிரதேசசபை தவிசாளர் சின்னையா சிவராசா -போல்-, மற்றும் புங்குடுதீவின் அனைத்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெருந்தொகை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அங்கு சமூகம் அளித்த போலிஸ் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் உரையாடி “மிகவிரைவில்குற்றவாளிகளை கைது செய்வோம்” என வழங்கிய உத்தரவுக்கு அமைய ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

மேற்படி சம்பவம் குறித்து புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் திரு.ம.கணேஸ்வரன் அவர்களினால் பொலிசாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

poongudutheve-1

poongudutheve-2

poongudutheve-3

poongudutheve-4

poongudutheve-5

poongudutheve-6

Related Posts