Ad Widget

வன்புணர்வுகளுக்கெதிராக இளையவர்கள் போராட்டம்! நல்லுாரில் திரண்டனர்

சில தினங்களுக்கு முன்பாக    புங்குடுதீவில்  பாடசாலை மாணவி ஒருவர் ஊரில் உள்ள காமுகர்களால் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்படட சம்பவத்திற்கு கண்டணம் செலுத்தும் முகமாக சமூகவலைத்தளம் ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்ட  வன்புணர்வுகளுக்கெதிராக இளையவர்கள் போராட்டம் இன்று 17.5.2015 காலை 11 மணியளவில் நல்லுார் கந்தசுவாமி கோவில் முன்பாக நடைபெற்றது.

11212789_1064213740259004_3701960660631941789_n

இந்த போராட்டத்தில் நுாற்றுக்கணக்கிலான இளையவர்கள் பங்குபற்றினர். அவர்கள் வன்புணர்வுகளுக்கு எதிராகவும் குற்றவளிகளை துாக்கிலிடுமாறும் , குறித்த காமுகர்களுக்கு சார்பாக சட்டத்தரணிகள் வாதாடக்கூடாது என்றும் பாதாகைகள் தாங்கி கோசம் எழுப்பினர்.
இறுதியில் நடை பவனியாக சென்று வடமாகாண முதலைமைச்சர் நீதிபதி விக்கினேஸ்வரனிடம் மனு வழங்கப்பட்டது.நிகழ்வில் மாணவியின் படங்கள் தவிர்க்கப்பட்டிருந்தது.பொதுவான ஒரு எழுச்சியாக இருந்தது.அரசியல் நோக்கமற்றதாகவும் இருந்தது.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் வன்புணர்வுகளுக்கு அச்சப்படும் வகையிலான தண்டணைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்றும் இதுவே இங்கு நடைபெற்ற இறுதி வன்புணர்வு சம்பவமாக் இருக்கும் வகையில் நீதி வழங்கல் இருக்கவேண்டும் என்றும் ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர் .இது வரை எமது பிரதேசத்தில் நடைபெற்ற பெண்கள்  வன்புணர்வு சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதி வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. மழையின் மத்தியிலும் இந்தப்போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.11074174_1064214140258964_2046496643950791398_n

புதுடில்லியில் வழங்கப்பட்டது போல தண்டணைகள் குற்றவாளிகளுக்கு வழங்கும் வண்ணம் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளவும் வடமகாணசபை ஊடாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

“இவ்வாறான போராட்டத்தை வரவேற்கின்றோம்” முதலமைச்சர்

[Video :Posted by Mathiraj Mathy on Sunday, 17 May 2015]

ஆர்ப்பாட்டக்காரர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் இது தொடர்பில் ஏற்கனவே தாம் காவல் துறையினருடன்  தொடர்புகொண்டிருப்பதாகவும் , அது தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்றை தான் தயாரித்திருப்பதாகவும் அதனை நாளை அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.ஆர்ப்பாட்டக்காரர்களின் அதே எண்ணப்பாடுகளை தானும் கொண்டிருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் யாழ்மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் உஷாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நாளை( 18) ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடமும், ஆளுனரிடமும், வடபிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமும் மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.
மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன,

 
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தில் கடந்த புதன்கிழமை பாழடைந்த வீடொன்றில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவியை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி இளைஞர் சமூகத்திடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 
இது போன்ற சம்வங்கள் தொடர்ந்தும் இடம்பெறமலிருபதற்காக நாம் இதனை கண்டிக்கின்றோம்.,
பல்வேறு கனவுகளோடு பள்ளி சென்ற மாணவிக்கு ஏற்பட்ட இந்த நிலை முழுத் தமிழினத்தையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக தமிழன் என்பதாலேயோ என்னவோ தொடர்ச்சியாக பல மாணவிகள், பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்படுவதும் இன்று வரை நீதி கிடைக்காது தமிழர்கள் புலம்புவதுமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
சட்டமும் ஒழுங்கும் சீராக செயற்படுகின்றதா என்னும் வினா எலோரிடத்தும் சகஜமாக எழுத்துள்ளது.

 
புங்குடுதீவிலே சாரதாம்பாள், செம்மணியிலே கிருஷாந்தி, காரைநகரில் பள்ளி செல்லும் மாணவி கடற்படையால் குதறப்பட்டமை, பருத்தித்துறையில் ஒரு பாடசாலை மாணவி, என இன்னும் பலவோடு இப்பொழுது மீண்டும் இப் புங்குடுதீவு மாணவி என நீளும் இப் பட்டியலுக்கு நீதித்துறை என்ன செய்திருக்கின்றது.குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்தும் உச்சபட்ச தண்டனை வழங்காமையால் தான் இவை தொடர்வதாக நாம் உணர்கின்றோம்.

 
2009ற்கு முற்பட்ட காலங்களில் நட்ட நடு இரவில் கூட யாரும் எங்கும் செல்லக்கூடிய சூழல் இருந்ததை எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதோடு இதை சர்வதேசமும் உணர்ந்துள்ளது. காரணம் சட்டம் மிக இறுக்கமாக இருந்தது என்பதோடு சட்டம் ஒழுங்கு மக்கள் நலனில் அக்கறை கொண்ட முறையான தலமையும் இருந்ததை சொல்லியாக வேண்டும்.

 
பொலிஸ் மற்றும் இராணுவம் கடற்படை என பாதுகாப்பு தரப்பினர் வடக்கில் நிறைந்துள்ள சூழலில் தொடர்ச்சியாக தமிழ்ப்பெண்கள், மாணவிகளின் கொலைகள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளதுடன் வடக்கில் காணப்படும் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் சம்பந்தமாக காவல்துறை எடுக்கின்ற நடவடிக்கைகளில் மீது கேள்வி எழுந்துள்ளது.

 
இந் நிலையில் இத்தகைய கொடுரமான வெறித்தனமான குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் சம்பவங்களால் வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது..
ஆகவே இவை உடனடியாக கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு குறிப்பாக இளம் பெண்கள் மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், குற்றவாளிகள் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்நிறுத்தி வழங்கப்படக் கூடிய உச்சபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமென தங்களை வேண்டிநிற்கின்றோம். அத்தோடு வழங்கப்படும் தண்டனை இதுவே இவ்வாறான சம்பவத்தின் இறுதி அத்தியாயமாக அமைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு தங்களை வேண்டிநிற்கின்றோம்.

 

Related Posts