Ad Widget

வித்தியாவிற்கு வடக்கு அவையில் அஞ்சலி

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு சிறுமிக்கி வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் புங்குடுதீவில் வன்புணர்விற்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி வித்தியாவிற்கு ஏகமனதாக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன், அமைச்சர்களான கல்வி அமைச்சர் குருகுலராசா , மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் , உறுப்பினர்களான நடராஜ், அனந்தி, குணசீலன் , சுகிர்தன், இந்திரராசா , ஆனோல்ட் மற்றும் விந்தன் கனகரத்தினமும் அஞ்சலி உரையினை நிகழ்த்தியிந்தனர்.

Related Posts