Ad Widget

யாழ்.மக்களிற்கு பொலிஸ் திணைக்களம் விடுத்த விசேட செய்தி!

புங்­குடுதீவு மாணவி வித்தியா படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் இது வரை கைது செய்­யப்­பட்­டுள்ள ஒன்­பது சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அவர்­களில் எவரும் தப்­பிக்க முடி­யாது. பொலிஸ் மா அதி­பரின் நேரடி கட்­டுப்­பாட்டில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் சந்­தேக நபர்கள் தப்­பிக்­கவே முடி­யாது. சட்டம் தன் கட­மையை செய்யும். அதனால் பொது மக்கள் அமைதி காத்து பொலி­ஸாரின் விசா­ர­ணைக்கு தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என பொலிஸார் யாழ் மக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்.மக்­க­ளுக்கு விசேட செய்­தி­யாக பொலிஸ் மா அதிபர் சார்­பாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

‘மாணவி வித்­தி­யாவின் படு­கொலை தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த சிறப்பு பொலிஸ் குழுவினர் முதலில் மூவரை கைது செய்­தனர். பின்னர் மேலும் ஐவரை கைது செய்­தனர். அதன் பின்னர் வெள்­ள­வத்­தையில் வைத்து மற்­றொ­ரு­வ­ரையும் கைது செய்­தனர். இந்த எல்லா சந்­தேக நபர்­க­ளை யும் கைது செய்ய பொதுமக்கள் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினர்.

இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தற்­போது பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் நேரடி கட்­டுப்­பாட்டில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதனால் சந்­தேக நபர்கள் எவரும் தப்­பிக்க வாய்ப்பே இல்லை. விசா­ர­ணை­களில் சிலர் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்தி பொதுமக்­களை குழப்ப நினைக்­கின்­றனர். எனினும் கைது செய்­யப்­பட்­டுள்ள எல்லா சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். எவர் தொடர்­பிலும் பார­பட்சம் காட்­டப்­ப­ட­மாட்­டது. நாம் சந்­தேக நபர்­களை நீதிமன்றில் உரிய சாட்­சி­யங்­க­ளுடன் ஒப்­ப­டைப்போம். குறிப்­பாக சந்­தேக நபர்கள் அனை­வ­ருக்கும் எதி­ராக கடத்தல், பலாத்­காரம் மற்றும் கொலை குற்றச்சாட்­டுக்­களை பொலிஸார் சுமத்­தி­யுள்­ளனர்.

இந் நிலையில் சந்­தேக நபர்­களின் வீடு­களுக்கு தீவைத்­தல்கள் ஊடாக அவர்­க­ளுக்கே அது நன்­மை­யாக அமையும். ஏற்­க­னவே பலாத்­காரம் செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட மாண­வியின் மூக்குக் கண்­ணா­டியும் காத­ணி­களும் பிர­தான சந்­தேக நபரின் வீட்­டுக்குள் இருந்த நிலையில் அது அந்த வீடு எரிக்­கப்­பட்­டதில் தீயில் எரிந்து அழிந்­து­விட்­டது. இந் நிலை­மைகள் அவர்­க­ளுக்கே நன்­மையைக் கொடுக்கும்.

அதனால் விபத்தின் போதோ, அல்­லது இப்­ப­டி­யான கொடூ­ரங்­களின் போதோ பொதுமக்கள் சந்­தேக நபரின் உட­மை­க­ளு க்கு தீ வைத்து அல்­லது சேதம் விளை­விப்­பதில் இருந்து தவிர்த்­து­கொள்ள வேண்டும்.

இந் நிலையில் இந்த வழக்கை பொலிஸார் மரபணு சாட்சியங்கள் ஊடாகவே முன்னெடுத்து செல்ல எதிர்பார்க்கின்றனர். இது சந்தேக நபர்களுக்கு எதிரான மிக முக்கியமான தடயம். எனவே பிரதேசத்தின் அமைதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts