Ad Widget

புங்குடுதீவு படுகொலை! பொலிஸ் விசாரணையில் திருப்தியில்லை! பிரதியமைச்சர் விஜயகலா

புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் பொலிஸார் முன்னெடுத்துவரும் விசாரணைகள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகம் ஒன்றிற்கு நேற்று திங்கட்கிழமை வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்த விசாரணைகள் இனியும் சரியான முறையில் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச அமைப்புக்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் படுகொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனவா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மாணவியின் படுகொலைக்கு தொடர்புள்ளது.

அத்துடன் பிரதமர் கடந்த வாரம் பொலிஸ் திடீர் இடமாற்றங்களை செய்திருக்கிறார்.

இடைநிறுத்த வேண்டியோரை இடைநிறுத்தாமல் அப்பாவி பொலிஸ் அதிகாரிகளே இங்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதனை நான் நிராகரிக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் மட்டுமல்ல, இதுபோன்ற பல துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்கும் சூழ்நிலையிலும் மாணவி படுகொலை விசாரணை மற்றும் அதற்கு முன்னரான இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் யாவும் மந்தகதியிலேயே உள்ளன என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Related Posts