Ad Widget

நிலத்தடி நீர் மாசை ஆராய நோர்வே வல்லுநர் குழு யாழ்.வருகை

சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுவது குறித்து முழுமையான ஆய்வுகளை நடத்த நோர்வே நாட்டிலிருந்து இரு வல்லுநர்களைக் கொண்ட சிறப்புக் குழு நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளது.

சுன்னாகம் பகுதியில் இவர்கள் நேரடியான ஆய்வுகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சுன்னாகம் பிரதேசத்து குடிதண்ணீருடன் கழிவு ஒயில் கலந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன.

உள்ளுரில் நடத்தப்பட்ட நில சோதனைகளில் பார உலோகம் உள்ளிட்ட வேதியல் பொருள்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து வடக்கு மாகாண சபையால் வல்லுநர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.தமது சோதனைகளில் பார உலோகம் உள்ளிட்ட பொருள்கள் தண்ணீரில் இருக்கவில்லை என்று அந்தக் குழு இடைக்கால அறிக்கை ஒன்றை விடுத்தது.இதனால் குழப்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வல்லுநர்கள் சுன்னாகம் நிலத்தடி நீர்ப் பிரச்சினை மற்றும் ஒட்டுமொத்த குடாநாட்டின் குடிதண்ணீர்ப் பிரச்சினை ஆகியன குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts