Ad Widget

குடாநாட்டில் சில்லறைகளுக்கு தட்டுப்பாடு

பெற்றோல் செற், பேருந்துகளில் ரிக்கற் மற்றும் கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு மிச்சக் காசுகள் கொடுக்கப்படுவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.அது உண்மை தான் அதற்கு காரணம் குடாநாட்டில் போதியளவு சில்லறைக்காசுகள் இல்லை என்று வணிகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் சுட்டிக்காட்டினார்.

நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

கடைகள்,மற்றும் பேருந்துகளில் மிச்சக் காசுகள் கொடுக்கப்படுவதில்லை என்று மக்களால் குற்றஞ்சாட்டப்படுவது உண்மை .ஏனென்றால் குடாநாட்டில் போதிய சில்லறைக்காசுகள் இல்லை.இதனாலேயே கடை உரிமையாளர்கள் மட்டுமன்றி பேருந்து நடத்துநர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே போதியளவான சில்லறைக்காசுகளை குடாநாட்டிற்கு பெற்றுத்தருமாறு ஜெயசேகரம் மாவட்ட அரச அதிபரிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும் மக்களும் தம்மிடம் உள்ள சில்லறைகளை உண்டியல்களில் நிரப்பாமல், கடைகளில் கொடுத்து அதனை தாளாக மாற்றி உதவுமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

Related Posts