Ad Widget

ICTA புதிய தலைவராக சித்ராங்கனி முபாரக்!

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் மாற்றத்துடன் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) தலைவர் பதவி மற்றும் பணிப்பாளர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மாற்றமானது புதிய அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் புதிய தலைவராக நியமிக்கப்ட்டுள்ள திருமதி சித்ராங்கனி முபாரக் நேற்று முன்தினம் (09) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முகாமைத்துவ பணிப்பாளராக...

வரவுசெலவு திட்ட சலுகைகள் வழங்கப்படாவிட்டால் முறைப்பாடு செய்யலாம்

இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சரியான முறையில் கிடைக்காமை தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யலாம். 0112 399 146, 0771 088 922 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக ,இம்முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஆலோசனைக்கமைய இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Ad Widget

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஈ.பி.டி.பி பிரதிநிதிகள் சந்திப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் மேற்படி சந்திப்பு நேற்று (10) இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்ற நாளாந்த பிரச்சினைகள் மற்றும் சமகால, எதிர்கால அரசியல் நிலவரங்கள் என்பன குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொடர்ச்சியாக...

வட மாகாண சபை பிரேரணை பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் – இந்தியா!

இலங்கை புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச இன அழிப்பு விசாரணை சவாலுக்கு உட்படுத்துமானால் அது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழர் மீதான இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கக்கூடியதாக அமையும் என்றும் அந்த பாதிப்பு...

தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு சீனாவிடம் உதவி கேட்கிறார் சம்பந்தன்!

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும் என்று இலங்கை வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார். கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து இலங்கையின் அரசியல் களநிலைவரத்தில் ஏற்பட்டுவரும்...

யாழ்.இந்துக் கல்லூரி வாகனத்தின் கண்ணாடிகள் உயர்தர மாணவர்களால் உடைப்பு

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முச்சக்கரவண்டி, பஸ் வண்டி ஆகியவற்றின் கண்ணாடிகளை உயர்தர மாணவர்கள் அடித்து நொருக்கியுள்ளதாக அதிபர் ஐயம்பிள்ளை தயானந்தராசா, செவ்வாய்க்கிழமை (10) முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். ஆசிரியர் ஒருவருடன் முரண்பட்டுக்கொண்ட மாணவர்கள், இவ்வாறு கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். உடைந்த கண்ணாடிகள் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை என அதிபர்...

இனப்படுகொலை குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். இறுதிகட்டப் போரின்போது ஏராளமானத் தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும்...

முதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

என்னை அறிந்தால் கௌதமின் திரைவாழ்க்கையில் நல்ல ஓபனிங்கை மீண்டும் பெற்றுத் தந்திருக்கிறது. கௌதம் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார். என்னை அறிந்தால் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விக்ரமிடம் ஒரு கதை கூறியிருக்கிறார் கௌதம். அது அவருக்குப் பிடித்துள்ளது. தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படம் முடிந்ததும்...

நீரில் உடனடி எண்ணைப்பரிசோதனைக்கு 1.3 மில்லியன் செலவில் கருவி புலம்பெயர் தமிழர் அனுப்புகின்றனர் – அமைச்சர் ஐங்கரநேரன்

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு 10.02.2015 வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப்பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது....

நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள் : சமூக சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முதல் பண்ணை சுகாதார கிராமத்திற்கு முன்னால் முன்னெடுத்தனர். 1998 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சமூக சுகாதார பணியாளர்களாக 232 பேர்...

சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.பல்கலையில் சுவரொட்டி!

இலங்கையின் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் எம்.பி. ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளே' என விளித்து ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டிகளில் "ஜனநாயக சோசலிஷக் குடியரசு எனப்படும் இலங்கையின் தேசிய சின்னங்கள் அனைத்திலும் சிங்கள மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் அடையாளங்களே...

வடக்கு மாகாண சபையில் இனவழிப்புப் பிரேரணை தீர்மானமாகியது!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்தவருடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, நீண்ட இழுபறிக்குப்பின்னர் இன்று அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் தீர்மானமாககியது. வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகக் கட்டட தொகுதியில் நடைபெற்றது. இந்த அமர்வில் சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்து உரையாற்றினார். சட்டநடைமுறைகளை...

தாமதமாக ஆரம்பமாகிய சபை அமர்வு

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபைக்கு வரத் தாமதமாகியதால் வடமாகாண சபை அமர்வு காலை 10.09 மணிக்கே ஆரம்பமாகியது. வழமையாக வடமாகாண சபை அமர்வு 9.30 மணிக்கு ஆரம்பமாகின்ற நிலையில் இன்றைய அமர்வு தாமதமாக ஆரம்பமாகியது. கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (10) ஆரம்பமாகியது. ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த 2014...

கோமகனின் விடுதலையை வலியுறுத்தி மாகாண சபைக்கு முன் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடக்கு மாகாணசபையின் 24 ஆவது சபை அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் கோமகனின் விடுதலைக்கான மக்கள்...

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இலங்கையர்கள்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 112வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாகவும், அதிகபட்சமாக...

தாயின் பூதவுடலை சுமந்து சென்று சுடலையிலும் இறுதிக் கடன்களை நிறைவேற்றிய பெண் பிள்ளைகள்

யாழ்.கோப்பாயில் தாயின் இறுதிச் சடங்கில் பூதவுடலை அவரது பெண் பிள்ளைகள் நால்வரும் முன்வந்து கண்ணீர் சிந்தியவாறு காவிய சம்பவம் அங்கு நின்ற அனைவரதும் நெஞ்சங்களை உருக்கியதுடன் வியப்பிலும் ஆழ்த்தியது. திருநெல்வேலி சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்...

அரசியலில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்?

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷாத் பதியுதீனை வரவேற்கும் நிகழ்வுகள் வன்னியில் இடம்பெற்று வருகின்றன. நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவுக்கு வருகை தந்த அமைச்சரை 'எமது தலைவரே வருக' என்று எழுதிய பதாதைகளுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய அரசின் கொள்கைகளில் ஒன்றான அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது....

புலிகளின் யாழ். மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் டொமினிக் மரணம்!

90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார். இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்தான் பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சு முயற்சிகள் தோல்வியைடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம்...

தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களைப் பதியுமாறு வேண்டுகோள்!

அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களையும் பதிவு செய்யும்படி தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தமிழ் கைதிகளினதும் விவரங்களை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர்...

அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, திங்கட்கிழமை(09) தெரிவித்தார். யாழ். பிரதேச செயலக புதிய கட்டட தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், பொதுமகனை...
Loading posts...

All posts loaded

No more posts