Ad Widget

இன்புளுவன்சா A 1H N1 தொற்றினால் 40 பேர் மரணம்!

நாடு முழுவதும் இன்புளுவன்சா A 1H N1 தொற்றினால் பாதிக்கப்பட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 10 பேர் கர்ப்பிணித் தாய்மார்கள். காய்ச்சல்- தடிமனுக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாடினால் உயிர் இழப்பை தவிர்க்கலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலத்த மஹிபால தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- தடிமன்அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக அருகில் உள்ள தகுதி பெற்ற மருத்துவர்களின் உதவியை நாடவேண்டும். அவசரப்பட்டு அஸ்பிரின் மற்றும் அது சார்ந்த மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. பரசிடமோல் மட்டுமே உடனடியாக பயன்படுத்த தகுதியானது. அஸ்பிரின் பாவனை வேறு பாதிப்புக்களுக்கு வழிவகுக்கும்.

சாதாரண தடிமன்தான் என்று சிகிச்சையை தாமதப்படுத்துவதே இவ்வுயிரிழப்புக்களுக்கு காரணம் என்று தெரிவித்தார்.

இவ்விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்று நோய் தடுப்பு பிரிவின் தலைவர் டொக்டர் பபா பலிஹவடன- பணிப்பாளர் டொக்டர் ஜூட் ஜயமஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts