Ad Widget

வடக்கு முதல்வர் அமெரிக்கா விஜயம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள கலாச்சார நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சில அமெரிக்கா உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அவுஸ்திரேலிய தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு ஒன்றும் அந்நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் உள்நாட்டு அரசியல் தொடர்பில் கருத்து வெளியிடும் போது நிதானமாக கருத்துக்களை வெளியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்கினேஸ்வரனுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் விக்கினேஸ்வரன் மேற்கொள்ளும் முதலாவது அமெரிக்க விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts