Ad Widget

முறையான அறிவிப்பு இன்றி வவுனியா மாவட்ட செயலாளர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது?

வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு உத்தியோகபூர்வ கோரிக்கை தனக்கு கிடைக்கவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலாளருடன் இணங்கி செயற்பட முடியாது என்று அவரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தனக்கு அறியக்கிடைப்பதாக அவர் கூறினார்.

மாகாண சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மத்திய அரசுடன் தொடர்புபட்டது என்றால் முறையாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மாவட்ட செயலாளர் குறித்து முறைப்பாடு, குற்றச்சாட்டு எதுவும் அமைச்சுக்கு பதிவாகவில்லை என்றும் அதனால் அவர் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதென்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

Related Posts